பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது : பாலு

புதுடில்லி : லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் இன்று 6வது நாளை எட்டியுள்ளது . இந்நிலையில் லாரி ஸ்டிரைக் குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது . லாரி ஸ்டிரைக்கால் பொது மக்கள் அத்தியவாசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர். செய்தி ஊடகங்கள் மூலம் நான் லாரி உரிமையாளர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறார். பொதுமக்கள் அவதிப்படுவதை அரசு பார்த்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source  &  Thanks :  dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.