குவஹாத்தியில் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி

குவஹாத்தி: அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.

நேற்று மாலை ஆறரை மணியளவில் மாலிகான் என்ற இடத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் உல்பா தீவிரவாதிகள் வைத்த குண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது.

சைக்கிளில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. இரு கார்களுக்கு பின்னால் இந்த சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்

இரு கார்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. வட கிழக்கு எல்லைப்புற ரயில்வே தலைமையகம் அருகே இந்த சம்பவம் நடந்தது.

ஜனவரி 1ம் தேதியும் குவஹாத்தியில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. அதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அதேபாணியில்தான் தற்போதைய குண்டுவெடிப்பும் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.