சூரக்குடி மஞ்சுவிரட்டு 5 பேர் காயம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் செகுட்டு அய்யனார் கோயில் மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது.இக்கோயிலில் மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் நடந்து வந்தது. இந்த ஆண்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால், கிராமத்தினர் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட் டது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி நடத்த கோர்ட்  உத்தரவிட்டது.நேற்று மாலை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் மஞ்சுவிரட்டு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் அடைக்கப் பட்டு, டாக்டர்கள் சோதனை செய்தனர்.

கிராமத்தினர் சார்பில் காளைகளுக்கு வேட்டி (கச்சை) வழங்கப்பட்டது.கோயில் மாடுகள் முதலில் திறந்து விடப்பட்டன. சீருடை  வீரர்கள் அவற்றை மடக்கினர். மாடுகள் முட்டி வேந்தன் பட்டி செல்வம் (45), சூரக்குடி காந்தி (50), சிங்கமங்கலப்பட்டி குமார் (19) உள்ளிட்ட 5 பேர்  காயம் அடைந்தனர். ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் சிகிச்சை அளித்தனர். டி.எஸ்.பி., ராமமூர்த்தி, தாசில்தார்கள் வளர்மதி, கதிரேசன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அன்னதானம் வழங்கப்பட் டன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.