மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் முன்னுதாரணம் ஆகும் என்று அச்சம்

வாஷிங்டன்: மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஆயுதங்களுடன் புகுந்து முக்கிய இடங்களை சிறைப்பிடித்து நடத்திய தாக்குதல், உலகம் முழுவதும் உள்ள பிற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று, அமெரிக்க காங்கிரஸ் சபையில், உயர் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் தொடர்பாக, அமெரிக்க காங்கிரஸ் சபை உயர்மட்ட கமிட்டியின் முன் அவர்கள் மேலும் கூறியதாவது: பயங்கரவாதிகள் இதுவரை நடத்திய தாக்குதல்களில் இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் நடத்தியது, பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களும், பின்னணியில் இருந்தவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது, ஒட்டு மொத்த முக்கியத்துவம் வாய்ந்தது
இத்தாக்குதலால் 500 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் அரசு விவகாரம் தொடர்பான செனட் கமிட்டியின் தலைவர் ஜோசப் லிபர்மன் எழுப்பிய கேள்விக்கு, நியூயார்க் நகர போலீஸ் கமிஷனர் விளக்கம் அளித்தார். அப்போது, “”சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு முன் மாதிரியாக அமைந்துள்ளது,” என்றார்.அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ.,யின் தலைமை புலனாய்வு அதிகாரி டொனால்டு வான் டுயன் கூறுகையில், “”மும்பையில் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலகின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம்,” என்று கவலை தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.