படையினரின் ஒரு குழுவே ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது: ரணில்

இலங்கையின் ஊடகங்கள் மீது இராணுவத்தின் ஒரு பிரிவினரே தாக்குதல்களை மேற்கொள்வதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஒரு சிறிய குழுவின் செயல்களால் நாடு அழிவுக்குள்ளாகப் போவதாக படைத்தரப்பு கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சியினரின் இடையூறுகளுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டார்.

இந்தக்குழு அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தமுடியாத நிலைக்கு சென்றுள்ளது. எனவே இந்தக்குழுவினால் ஊடகத்துறையினர் மாத்திரமல்ல,எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்

இதேவேளை சண்டே லீடர் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது நாடு இன்று பயங்கர சூழ்நிலையை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.