ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல்

ஆளுங்கட்சி அமைச்சர் ஏ.எச. எம. பெளசி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தமக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நடந்த சம்பவமே தமக்கு நடக்கும் என அந்த தொலைபேசி அச்சுறுத்தலில் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜுயசேகர குறிப்பிட்டுள்ளார்.

1222889 என்ற இலக்கத்தில் இருந்தே தமக்கு நேற்று அதிகாலை 12.30க்கு இந்த தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ எச் எம் பௌசி, தமக்கு தொலைபேசி மூலம் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தம்மையும் தனது மகனையும் கொலை செய்யப்போவதாக இந்த அச்சுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலியத்துறையின் தொழிற்சங்கத்தினர் மீதே தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.