இலங்கையின் அபாய நிலைகுறித்து இராஜதந்திரிகளுக்கு எதிர்க்கட்சிகள் விளக்கம்

வெளிநாட்டு இராஜதந்திரிகளை நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் தற்போதைய அபாயமான சூழ்நிலை குறித்து ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் இராஜதந்திரிகளுக்கு விளக்கினர்.

ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, ஐக்கிய ராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் உயர்ஸ்தானிகர்களும் தூதுவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது இலங்கையில் ஜனநாயகத்தின் உறுதித்தன்மைக்கான அவசியத்தை இராஜதந்திரிகள் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.