திருமலையில் சிறிலங்கா படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 12 படையினர் பலி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பன்குளம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பன்குளத்திலிருந்து மொறாவேவ நோக்கி உழவூர்தியில் சென்று கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 8:55 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கிச் சூட்டினையும் நடத்தினர்.

மொறாவேவ பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Source  &  Thanks  :   puthinam.com

Leave a Reply

Your email address will not be published.