ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சின் புதிய பாலிசி ‘சூப்பர் சர்பிளஸ்’

சென்னை: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் துவக்கியுள்ள ‘சூப்பர் சர்பிளஸ்’ பாலிசியில் இதுவரை 3,000 பாலிசிகள் மூலம் 1.5 கோடி ரூபாய் பிரீமியம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தலைவர் ஜெகன்நாதன், கூடுதல் துணைத் தலைவர் ரமா கூறியதாவது: ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டுமே நடத்தி வரும் ஸ்டார் இன்சூரன்ஸ், மூன்றாவது காலாண்டு முடிவில் 386 கோடி ரூபாய்க்கு பிரீமியம் பெற்றுள்ளது. கடந்தாண்டை விட இது இரு மடங்கு அதிகம். இந்தாண்டு முடிவில் 500 கோடி ரூபாயைப் பெற்றுவிடும். மருத்துவ வசதி, விபத்து காப்பீடு மற்றும் சுற்றுலா மூலம் பாலிசிதாரர்களுக்கு சேவையாற்றி வருகிறது. நீரிழிவு, எச்.ஐ.வி., கேன்சர் உடையோர் மற்றும் மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. புதிய பாலிசியான ‘சூப்பர் சர்பிளஸ்’ மூலம் 3,000 பாலிசிகள் பெற்று 1.5 கோடி ரூபாய் பிரீமியம் கிடைத்துள்ளது. இந்த பாலிசியில் மூன்று லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவுக்கு வழங்கப்படுகிறது. இதன் ஆண்டு, பாலிசி பிரீமியம் 3,000 முதல் 5,700 வரை பெறப்படுகிறது. தனிநபர் மற்றும் கணவன்- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப பாலிசி என இருவகையாக ‘சூப்பர் சர்பிளஸ்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்களது பாலிசிதாரர்களுக்கு அடையாள அட்டை, 24 மணி நேர சேவை, 75 டாக்டர்கள் கொண்ட மருத்துவக்குழு என பல்வேறு வசதிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Source   &  Thanks :   dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.