திருமலை மொரவேவாவில் கிளேமோர் தாக்குதல்: 6 வான்படையினர் உட்பட 9 பேர் பலி; 6 பேர் காயம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா பன்குளம் பிரதேசத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் குண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரி்வி்க்கப்படுகின்றது.

த்தாக்குதல் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:-

இன்று வெள்ளிக்கிழமை காலை 8.55 மணியளவில் மொரவேவா பன்குளம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் சென்று கொண்டிருந்த படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலில் 6 வான்படையினரும் 3 ஊர்காவல் படை சிப்பாய்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்

அத்துடன் இப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 3வான் படையும், 4 பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும், மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source   &    Thanks :   tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.