மதுபானத்தை வழங்கி இராணுவ உயர் அதிகாரியிடம் கொள்ளை

இலங்கை இராணுவத்த சேர்ந்த கேர்னல் தரத்தை உடைய அதிகாரி ஒருவருக்கு மது பானத்தை வழங்கி அவரிற்கு சொந்தமான ஆதனம் மற்றும் பணத்தை கொள்ளையிட்;டவர் தொடர்பான விசாரணைகளை நடாத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இதற்கான உத்தரவினை இன்று காவற்துறையினருக்கு வழங்கினார்.

கொட்டாஞ்சேனை காவற்துறையினர் பானாகொடையில் பணியாற்றும் பாதிப்படைந்த கேர்னலினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு இனங்கவே காவற்துறையினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொடடாஞ்சேனை காவற்துறையினர் தமது விசாரணைகளை முன்னெடுத்து செல்வதற்கு சில விசேட அனுமதியை நீதிமன்றிடம் கோரியிருந்தனர்.

காவற்துறையினரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க வாதி மற்றும் பிரதி வாதிகளுக்கு இடையிலான சம்பாசனையை தொலை தொடர்பு அமைப்புக்கள் இரண்டிடம் இருந்து பெறுவதற்கான பூர்வாங்க அனுமதியை நீதி மன்றம் வழங்கியுள்ளது

Source    &  Thanks :   tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.