லாரி ஸ்டிரைக்-கேஸ் சிலிண்டெருக்கும் கடும் தட்டுப்பாடு!

சென்னை: டேங்கர் லாரிகளின் ஸ்டிரைக் காரணமாக சென்னை மாநகரில் 4 லட்சம் பேருக்கு கேஸ் சிலிண்டர் வழங்க முடியாமல் கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் தவித்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை மேலும் மோசமடையும் என அஞ்சப்படுகிறது.

எண்ணை நிறுவன அதிகாரிகள் ஒருபக்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் டேங்கர் லாரிகளும், கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளும் மறுபக்கம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.

இதனால் கேஸ் சிலிண்டர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகவே பத்து நாள், 15 நாள் தாமதமாகத்தான் சிலிண்டர்கள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் ஸ்டிரைக்கும் கூட சேர்ந்து விட்டதால் கேஸ் ஏஜென்சிகள் எப்போது சிலிண்டரை வழங்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட கேஸ் ஏஜென்சிகள் உள்ளன. இவற்றில் 4 லட்சம் பேர் தற்போது சிலிண்டரைப் புதுப்பிக்க பதிவு செய்து காத்துள்ளனர். இவர்களுக்கு சிலிண்டர்களை சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஓரிரு நாட்களில் நிலைமை மேலும் மோசமடையும் என அஞ்சப்படுகிறது.

இருப்பினும் மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் உள்ளிட்ட முக்கியமானவற்றுக்கு மட்டும் வேன்கள் உள்ளிட்டவை மூலம் கேஸ் சப்ளை செய்யப்படுகிறது.

Source      &  Thanks:   thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.