எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடனான பேச்சு தோல்வி*இன்று பணிக்கு வராவிட்டால் பதவி நீக்கம் என எச்சரிக்கை

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், அடுத்த இரண்டு நாட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சப்ளை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கிடையில், வேலை நிறுத்தத் தில் ஈடுபடும் அதிகாரிகள் இன்று பணிக்கு வராவிட்டால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என, அரசு அறிவித்துள்ளது.

சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதற்கிடையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலை வர் சர்தக் பெகூரியா கூறிய தாவது:எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்களிடம் இன்று (நேற்று) காலை பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் ஒரே பிரச்னையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து கவனித்து வருவதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டோம்.

இருந்தாலும், அவர்கள் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வருவதாகத் தெரியவில்லை. தற்போது வரை நாங்கள் நிலைமையை சமாளித்து வருகிறோம். ஆனாலும், பெட்ரோலிய பொருட்கள் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் தொடர்ந்தால், பெட்ரோல் “பங்க்’கள் நாளை (இன்று) முதல் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து போதிய அளவுக்கு லோடுகள் செல்லாததாலும், எரிபொருள் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் பெட்ரோல் “பங்க்’கள் பெட்ரோல், டீசலை போதுமான அளவு ஸ்டாக் வைக்கவில்லை என்பதாலும் பல இடங்களில் தற்போது பற்றாக் குறை உருவாகியுள்ளது.இவ்வாறு சர்தக் பெகூரியா கூறினார்.

ஏற்கனவே, லாரி ஸ்டிரைக்கால் சமையல் எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்கள் அதிகளவில் பாதிக் கப்பட்டுள் ளன.இந்நிலையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தலைநகர் டில்லி உட்பட பல இடங்களில் நேற்றே ஸ்டாக் இல்லை என போர்டு வைக்கப்பட்டு, பல பெட்ரோல் “பங்க்’கள் மூடப்பட்டிருந்தன.

ஆனால், அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தினால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என, பெட்ரோலிய துறை கூடுதல் செயலர் சுந்தரேசன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:தற்போது நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. அரசு கடும் நடவடிக்கை எடுத்தால், சில பிரச்னைகள் வரலாம். இருந்தாலும், தற்போதைய பிரச்னையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

அந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிப்பதற்காக தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான எஸ்ஸார் நிறுவனத்திடம் இருந்தும், எச்.பி.சி.எல்., நிறுவனம் பெட்ரோல், டீசலை வாங்குகிறது. மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் உற்பத்தி தடைபட்டுள்ளதால், மின் நிறுவனங்கள் மற்றும் உர நிறுவனங்களுக்கான சப்ளை பாதிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.

இதற்கிடையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இன்று பணிக்கு வரவேண்டும். இல்லையெனில், அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு வட்டாரங்கள் மேலும் கூறுகையில், “பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பட்டியலை பொதுத்துறை நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அவர்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால், பணிநீக்கம் செய்யப் பட்டதற்கான நோட்டீஸ் ஒரு கட்டத்தில் அளிக்கப்பட்டு விடும்’ என்றன.

விமானங்கள் தாமதம்:மும்பை: பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தினால், விமான எரிபொருள் சேவை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானங்கள். அதிகபட்சமாக மூன்று மணி நேரம் வரை அவை தாமதமாக கிளம்பின.

குஜராத்தில் எஸ்மா சட்டம்:ஆமதாபாத்: பொதுத்துறை எண் ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அதை முறியடிக்கும் வகையில் குஜராத் மாநில அரசு, எஸ்மா சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.இதனால், தங்களின் நிலையை கடுமையாக்கியுள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகள், “எந்த விளைவு களையும் சந்திக்க தயார்’ என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

“அதிகாரிகள் நடத்தும் வேலை நிறுத்தத்தின் பாதிப்பு நாளை (இன்று) தான் தெரியவரும். பெட்ரோல், டீசல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற் படும். ஏற்கனவே 75 சதவீத பெட் ரோல் “பம்ப்’கள் பாதிக்கப்பட்டுள் ளன’ என, பெட்ரோல் “பம்ப்’ டீலர்கள் சங்கத்தின் தலைவர் கிரண்படேல் கூறினார்.

காத்திருந்த அமைச்சர்:எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா இடையே நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை நடக் கும் இடத்திற்கு அமைச்சர் தியோரா சென்றும், அதிகாரிகள் சங்கத் தலைவர்கள் அங்கு வரவில்லை. இதனால், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த அமைச்சர் பின், வீடு திரும்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு நான் ஒப்புதல் அளிக்க முடியாது. அதனால், போராட்டத்தை வாபஸ் பெறும்படி கேட்டுக் கொண்டுள் ளோம்’ என்றார்.

Source    &    Thanks :  dinamalar

Leave a Reply

Your email address will not be published.