சத்யம் கம்ப்யூட்டர்ஸ்க்கு பதிலாக சன் பார்மாவை சென்செக்ஸில் சேர்க்க பங்கு சந்தை முடிவு

மும்பை : பெரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டு கெட்ட பெயர் வாங்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை வரும் 12ம் தேதியில் இருந்து இன்டக்ஸில் இருந்து மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் நீக்குகின்றன.

இது குறித்து நேற்று மும்பை பங்கு சந்தை வெளியிட்ட அறிக்கையில், அதன் பெஞ்ச்மார்க் இன்டக்ஸ் சென்செக்ஸில் இருந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸை எடுத்து விட்டு அதற்கு பதிலாக சன் பார்மாவை சேர்ப்பதாக தெரிவித்திருக்கிறது. ஜனவரி 12ம் தேதியில் இருந்து இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்றும் பங்கு வர்த்தகர்களுக்கு அது தெரிவித்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையின் பல்வேறு பிரிவுகளான பிஎஸ்இ – 100, பிஎஸ்இ – 200, பிஎஸ்இ – 500, பிஎஸ்இ – டெக் மற்றும் பிஎஸ்இ – ஐடி ஆகிய எல்லா இன்டக்ஸ்களிலும் இருந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நீக்கப்படுவதாக அது தெரிவித்திருக்கிறது. பிஎஸ்இ – 100 இன்டக்ஸில் சத்யம் கம்ப்யூட்டர்ஸூக்குப்பதிலாக கிளாஸ்கோ ஸ்மித்லைன் பார்மாசூட்டிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது. பிஎஸ்இ – 200 இன்டக்ஸில் சத்யத்திற்கு பதிலாக கேஸ்டரால் இந்தியா சேர்க்கப்படுகிறது. பிஎஸ்இ – 500 இன்டக்ஸில் சத்யத்திற்கு பதிலாக கேடில்லா ஹெல்த்கேர் சேர்க்கப்படுகிறது. மும்பை பங்கு சந்தையைப்போலவே தேசிய பங்கு சந்தையும் அதன் எல்லா இன்டக்ஸிலும் இருந்து சத்யத்தை நீக்குகிறது. நிப்டி 50 இன்டக்ஸில் இருந்து சத்யத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரிலையன்ஸ் கேப்பிட்டலை சேர்க்கிறது. ஆனால் சிஎன்எக்ஸ் 100, எஸ் அண்ட் பி சிஎன்எக்ஸ் 500, சிஎன்எக்ஸ் ஐடி, மற்றும் சிஎன்எக்ஸ் சர்வீஸ் செக்டார் ஆகிய இன்டக்ஸ்களில் சத்யத்திற்கு பதிலாக எந்த நிறுவனம் சேர்க்கப்படுகிறது என்று இன்னும் தெரிவிக்கவில்லை.

Source  &   Thanks :  dinamalar

Leave a Reply

Your email address will not be published.