முல்லைத்தீவில் இடம்பெயர்ந்து சென்றோர் மீது சிறிலங்கா வான்படை தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களின் உழவூர்தி எரிந்து நாசமாகியுள்ளது.

பொதுமக்கள் பயணித்துக் கொண்டிருந்த உழுவூர்தியே எரிந்து நாசமாகியுள்ளது. அத்துடன் புதுக்குடியிருப்பு அரசாங்க அதிபர் பிரிவின் ஊர்தியும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை, சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் முல்லைத்தீவு பகுதி பொதுமக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் தாக்குதலை நடத்தின.

இதில் பொதுமக்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அதேவேளை, முல்லைதத்தீவில் உள்ள சிலாவத்தை உண்ணாப்பிலவு கரைச்சி குடியிருப்பு மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினர் தொடரான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் பொதுமக்களின் வீடுகள் பல அழிவடைந்துள்ளதுடன் அப்பகுதி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, யாழ். வடமராட்சி கிழக்கு மக்கள் செறிவாக வாழும் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கரையோர மக்களின் வாழ்வு தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி மக்கள் குடியிருப்புக்களை நேற்று இரவு இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையினரின் கிபீர் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு மக்கள் குடியிருப்புக்களை இன்று காலை இலக்கு வைத்து சிறிலங்கா படையின் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன.

வடமராட்சி கிழக்கு மக்களின் கடற்றொழில் நடவடிக்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Source  &  Thanks  :  puthinam.com

Leave a Reply

Your email address will not be published.