இஸ்ரேல் மீது லெபனால் ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் காஸா மீது கடந்த ஒரு மாதகாலமாக விமான மற்றும் பீரங்கித் தாக்குதல் மேற்கொண்டு 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதையடுத்த லெபனானிலிருந்தும் ராக்கெட் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லெபனானிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் இஸ்ரேலில் வடபகுதியான நகரியா என்ற இடத்திலுள்ள வைத்தியசாலையில் வீழ்ந்து வெடித்துள்ளது. இதனால் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து காஸாவில் இடம்பெறும் சண்டை எதிர்காலத்தில் உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.