லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்- ஐக்கிய தேசியக் கட்சி

பாராளுமன்றத்தில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று வெள்ளிக்கிழமை சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் சபாபீடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் ஆளும் தரப்பினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. எனினும், சூச்சல் குழப்பங்களுக்கும் மத்தியில் சபையின் அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுத்தச் செல்லப்பட்டன.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதா என சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இரத்துச் செய்த சபாநாயகர், சபை அமர்வுகளை எதிர்வரும் 20ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.