சிறிலங்காவில் உடனடியாக போ‌ர்‌ ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி 12ஆ‌ம் தே‌தி உ‌ண்ணா‌விர‌தம்: இல.கணேச‌ன்

சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி பா.ஜ.க. சா‌ர்‌பி‌ல் உ‌‌ண்ணா‌விரத‌ போராட்டம் நடைபெறவுள்ளது.

சென்னையில் எதிர்வரு‌ம் 12ஆ‌ம் தே‌தி பா.ஜ.க. சா‌ர்‌பி‌ல் உ‌‌ண்ணா‌விரத‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மாநில தலைவர் இல.கணேசன் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை அமல்படுத்த தமிழக முதலமை‌ச்ச‌ர் நேரில் சென்று வலியுறுத்தியும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார்.பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என அறிவித்து விட்டு இதுவரை செல்லாமல் இருப்பதும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் டி.ஆர்.பாலுவே அறிக்கை விடுவதும் தி.மு.க மீது சந்தேகத்தை கிளப்புகின்றன.

தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சா‌ற்‌றிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும் ஈழத் தமிழரின் உடமையை காவு கொடுக்க தி.மு.க தயாராகிவிட்டது என்பதையே இந்த மெத்தனம் நிரூபிக்கின்றது.அதேபோல சிங்கள ராணுவத்துக்கு ஆயுதமும், ஆலோசனைகளையும் பயிற்சியையும் இந்தியாதான் வழங்கி வருகிறது என்கின்ற குற்றச்சா‌ற்றையும் மத்திய அரசு மறுக்கவில்லை. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நாம் போரினை சந்தித்த போது இலங்கை அரசு நம்மை ஆதரிக்கவில்லை.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.