காசாப் பகுதிக்கான உதவிகள் நிறுத்தம்

காசா நிலப்பரப்பில் ஐ.நா மன்ற வாகனத் தொடரணி ஒன்று டாங்கு ஷெல்லால் தாக்கப்பட்ட பிறகு, காசா நிலப்பரப்புக்கு தான் வழங்கும் அனைத்து உதவி வழங்கல்களையும் இடைநிறுத்தி வைப்பதாக ஐ.நா கூறுகிறது.

ஐ.நா. மன்றப்பணியாளர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்படும் வரையில், அனைத்து உதவிப் பொருட்கள் அனுப்பப்படுவதும் நிறுத்தப்படுவதாக ஐ.நா மன்றத்துக்காகப் பேசவல்ல கிரிஸ் கன்னஸ் கூறினார்.

இஸ்ரேலிய ராணுவம் இந்த சம்பவம் குறித்து தான் விசாரித்து வருவதாகக் கூறியது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய குண்டுத்தாக்குதல் தொடங்கியதிலிருந்து காசாவில் 760க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக காசாவில் இருக்கும் மருத்துவப்பணியாளர்கள் தற்போது கூறுகின்றனர்.

முன்னதாக, தெற்கு லெபனானிலிருந்து வட இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து லெபனான் அரசு கண்டனம் செய்திருக்கிறது.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.