இலங்கை பிரச்னை: சோனியாவுக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை : இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து தமிழக மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தலையிட வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தபோது, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.

ஆனால் இதுவரை பிரணாப் முகர்ஜியை இலங்கைக்குச் செல்லவில்லை. தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.முல்லைத் தீவில் பெருமளவில் உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை அணுகியிருக்கிறேன்.

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட, நீங்கள் தலையிட வேண்டும். இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பேச்சு நடத்த ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Source & Thanks : in.tamil.yahoo.com

Leave a Reply

Your email address will not be published.