பாளை நகரை பிடித்து விட்டோம்- இலங்கை

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பாளை நகரை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையின் தலைமையகமாக இது செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்துதான் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் ஆர்ட்டில்லரி படைகள் அனுப்பப்படுவது வழக்கம்.

முகமலை பகுதியிலிருந்து முன்னேறிச் சென்ற ராணுவத்தினர் பாளையைப் பிடித்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

மேலும், முல்லைத்தீவிலிருந்து கிளம்பி வந்த இரு கடற்புலிகளின் படகுகளையும் தாக்கி தகர்த்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. அதிலிருந்த கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இதற்கிடையே, சுண்டைக்குளம் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் மீது வான்படையினர் குண்டு வீசித் தாக்கியதாக ஒரு தகவல் கூறுகிறு.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.