விடுதலை புலிகளின் தடை தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாகாது – இரா.சம்பந்தன்

சிறிலங்கா அரசாங்கத்தினால் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டுள்ளமை தமிழ்த் தேசியப்பிரச்சினைக்கு தீர்வாகாது என தமிழ் தேசிய கூட்டப்பு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி தமிழோசைக்குக் கருத்துத் தெரிவிக்கையில்

சிறிலங்கா அரசு பல விடயங்களைச் செய்திருக்கிறது அதில் ஒன்றுதான் புலிகளைத் தடை செய்துள்ளமை. இவ்வாறு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது. பின்னர் அதன் காரணமாக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றியது. அரசின் திட்டமிட்ட செயலாகும்.

அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கை மூலம் இராணுவ ரீதியாக தமிழ்த் தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசு எடுத்திருக்கும் கடினமான முடிவு என்றே கருதுகின்றேன். அதற்கு உதவியாக சில, பல தமிழ்க் குழுக்கள் செயற்பட்டால் மாத்திரம் போதும்; அதன் மூலம் இராணுவ ரீதியாகத் தீர்வு கண்டுவிடலாம் என்று அரசு எண்ணுகின்றது. புலிகளைத் தடைசெய்திருப்பது அந்த முடிவின் ஒரு அங்கம் என்று கருதுகின்றேன்.

பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது இந்தியாவுக்குத் தெரியும், சர்வதேசத்திற்கும் தெரியும். ஆகவே, இந்தத் தடையின் மூலமாக தமிழ்த்தேசியப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில் அரசு பெரும் தடையை ஏற்படுத்தியிருக்கிறது. யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் மிகக்குறைந்தளவில் மாத்திரமே வெளியேறியிருக்கிறார்கள்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.