யுக்ரெயினுக்கான அனைத்து எரிவாயு வினியோகத்தையும் நிறுத்துமாறு ரஷியா உத்தரவு

யுக்ரெயினுக்குச் செல்லும் அனைத்து எரிவாயு வினியோகத்தையும் நிறுத்துமாறு ரஷ்யப் பிரதமர் விளாடிமர் புடின் அந்நாட்டின் அரச எரிசக்தி நிறுவனமான காஸ்புரோமுக்கு உத்திரவிட்டுள்ளார்.

ஐரோப்பாவுக்கு வரும் எரிவாயு குறைந்ததற்கு யுக்ரேயின்தான் காரணம் தான் காரணமல்ல என்று காட்டுவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்நிலையில் எரிவாயுக் குழாய்களை மூடும்படி காஸ்ப்புரோமின் தலைமை நிர்வாகி அலேக்சி மில்லரிடம் பிரதமர் புடின் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றனர்.

தங்களுக்கு ரஷ்ய எரிவாயு சுத்தமாக வரவில்லை என்று ஏழு நாடுகள் கூறியுள்ளன. யுக்ரெயின் நான்கு எரிவாயுக் குழாய்களை மூடியதே இதற்குக் காரணம் என்று ரஷ்யா கூறுகிறது. ஆனால் வினியோகங்களை ரஷ்யா ஏற்கனவே நிறுத்திவிட்டதாக யுக்ரேயின் கூறுகிறது.

இது குறித்து சரிபார்க்க கண்காணிப்பாளர்களை ரஷ்ய எல்லைக்கு அனுப்புமாறு யுக்ரேனியத் தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழைப்புவிடுத்துள்ளனர்

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.