மங்கள சமரவீரவை கொலை செய்ய கோத்தபாய சதித்திட்டம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவை கொலை செய்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள குற்றம் சாட்டியுள்ளார்.

1931 காலப் பகுதியில் காணப்பட்ட ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி முறையை தற்போதைய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நடத்துகிறது ஊடகங்கள் மீதும் அடக்கு முறை, பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி மற்றும் அரச சொத்துக்கள் சூறையாடப்பட்டுகின்றன.

போரினால் மாத்திரம் பயங்கரவாதத்தை அழித்துவிட முடியாது என்பதற்கு கடந்த கால இலங்கையில் அரசியல் வரலாறு சாட்சியாகும். எனவே, அரசியல் தீர்வே போரை முடிவுக்குக் கொண்டு வரவுள்ள ஒரே வழி.

ஐ.தே.க.வின் மக்கள் எழுச்சி “பொறுத்தது போதும் என்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில்” கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தள்ளார்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.