மன்மோகங்சிங்குக்கு கறுப்புக்கொடி பெரியார் தி.கவினர் 700 பேர் கைதாகி விடுதலை

ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு விடுத்த கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தினர் 700க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வந்திருந்தார்.

இதனால் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் ஏற்பாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பெரியார் திராவிடர்கழக தோழர்கள் திரளாக இன்று வியாழக்கிழமை காலை 8. மணியளவில் சென்னை கவர்னர் மாளிகை முன்பு தடையை மீறி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருமணமண்டபத்தில் சிறைவைக்கப்பட்டு மதியம் 1 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் புதுவை மாநில பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் லோகு.அய்யப்பன் தலைமையில் புதுவையிலிருந்து 150 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும், கோவையிலிருந்து மாநகர அமைப்பாளர் தோழர் இ.மு.சாஜித் ஒருங்கிணைப்பில் 170 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும் , சேலம் ஈரோடு பகுதியிலிருந்து தோழர் இராம.இளங்கோவன் ஒருங்கிணைப்பில் 300க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும் , மதுரையிருந்து 120 க்கு மேற்பட்ட பெரியார் தி.க. தோழர்களும், மற்றும் பல பகுதியிலிருந்தும் திரளாக பெரியார் தி.க. தோழர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் ந.பன்னீர் செல்வம் தலைமையில் திரளான மாணவர்களும் , ஏனைய பிற அமைப்பின் தலைவர்களும், சென்னையில் வேறொரிடத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்திருந்த தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கடைசி நேரத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இவ்வார்ப்பாட்டத்தில் பங்குகொண்டார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.