நிரந்தர சமாதானத்துக்கு அரசியல் தீர்வே ஒரே வழி: ஐக்கிய நாடுகள் சபை

இலங்கை அரசு சமீபத்தில் சில இராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும் நிரந்தர சமாதானத்திற்கு அரசியல் தீர்வே ஒரே வழி என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இணையத்தளமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய இராணுவ நிலைவரத்தினை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம். மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள், சகல தரப்பையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்குமாறும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் அரசியல் தீர்வு மூலமே சாத்தியம் என ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.