கிளிநொச்சியை கைப்பற்றியமை அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது: பிரிட்டன் அறிக்கை

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரவுண் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.

இந்நிலையில், அனைத்து மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய அரசியல் தீர்வின் அவசியத்தை தற்போதைய நிலை மேலும் விரைவுபடுத்தியுள்ளது. அது மாத்திரமன்றி அரசியல் தீர்வின் மூலமே உறுதியானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான அமைதியை இலங்கையில் நிலைநாட்டக் கூடியதாக இருக்கும். என தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.