ஸ்டிரைக் நீடித்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் : இந்தியன் ஆயில் கார்பரேஷன் எச்சரிக்கை

புதுடில்லி : நாடு முழுவதும் 13 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஸ்டிரைக் 2வது நாளை எட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது :

பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை தொடர்வார்களேயானால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். தற்போது உள்ள கையிருப்பு இன்னும் 2 தினங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது . எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கத்தினரை இன்று காலையில் சந்தித்து பேசினோம். ஆனால், அவர்களுடன் சுமூகமான தீர்வு ஏதும் ஏற்படவில்லை. எனவே கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் எச்சரித்தார்.

நோ ஸ்டாக் :

சென்னையில், அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் மக்கள் பெட்ரோல், டீசல் வாங்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். சென்னையில் நிறைய பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக , “நோ ஸ்டாக்” என்ற பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டில்லியில் பெட்ரோல் தட்டுப்பாடை சமாளிக்க , பங்க்குக

ளில் ஒரு நபருக்கு 200ரூபாய்க்கு மேல் பெட்ரோல் வழங்க மறுக்கப்படுவதாக தெரிகிறது. மத்திய அரசு தலையிட்டு எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு விரைவில் தீர்வு கொண வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பு :

பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி தடைபட்டுள்ளது. மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 12 உள்நாட்டு விமானங்கள் 40 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டன.

Source  &  Thanks :   dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.