பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நீக்கம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டின் தேசியப் பாதுபாப்பு ஆலோசகர் மகமூத் அலி துரானி நேற்றிரவு திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்று, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசர் மகமூத் அலி துரானி கூறியிருந்தார்.

இதன் மூலம், ‘அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்ல’ என்று அந்த நாடு தெரிவித்து வந்த பொய் அம்பலமானது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் அவப்பெயரும், தர்மசங்கடமும் உண்டானது.

இந்நிலையில், தேசிய பாதுபாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மகமூத் அலி துரானி நேற்றிரவு திடீரென நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,’முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பிரதமரை கலந்தாலோசிக்காமல் கருத்து வெளியிட்டதற்காக துரானி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல், பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் ஷெர்ரி ரகுமானும், அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று ஒப்புக் கொண்டிருந்தார். எனினும் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : in.tamil.yahoo.com

Leave a Reply

Your email address will not be published.