இலங்கை வடக்கு பகுதியில் தேர்தலா? கேலிக்குரியது என்கிறார் நடேசன்

கொழும்பு : “இலங்கையின் வடக்கு பகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசு கூறியிருப்பது கேலிக்குரியது. இதனால், எவ்விதமான பயனும் ஏற்படப் போவதில்லை’ என, விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், புலி கள் ஆதரவு இணையதளத்தில் அளித்துள்ள பேட்டி: வடக்கு பகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது; இது கேலிக்குரியது. இதனால், எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. 1977ல் நடந்த தேர்தலிலேயே, தங்கள் விருப்பம் என்ன என்பதை தமிழ் மக்கள் தெளிவாக அரசுக்கு தெரிவித்து விட்டனர்.

இலங்கைத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான். அரசியல் மற்றும் ராணுவ ரீதியான ஏராளமான சவால்களை நாங்கள் சந்தித்துள்ளோம். எங்கள் மக்களின் ஆதரவுடன் அந்த சவால்களை முறியடித்துள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையிலிருந்தும் நாங்கள் உறுதியாக மீள்வோம். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக எங் கள் மீது, இரண்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மக்களை பாதுகாப்பு கேட யமாக பயன்படுத்துவதாக அந்த அமைப்புகள் கூறியுள்ளன. அந்த அமைப்புகள் எங்கள் கட்டுப் பாட்டில் உள்ள பகுதிக்கு வந்து உண்மை என்ன என்பதை அறிந்து தகவல் வெளியிட வேண்டும். ஒரு தரப்பான செய்திகளை வெளியிடக் கூடாது. இலங்கை அரசு பல ஆண்டுகளாக போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச சமுதாயம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக மவுனமாக இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இவ்வாறு நடேசன் கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.