கத்தார் விமான‌ நிலைய‌த்தில் ப‌ரித‌விக்கும் இந்தியர்கள்

தோஹா: க‌த்தார் நாட்டின் த‌லைந‌க‌ர் தோஹாவிற்கு வேலைக்காக‌ சென்ற‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ தொழிலாள‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ப‌ணி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ந்து த‌ங்க‌ளை அழைத்துச் செல்லாத‌ கார‌ண‌த்தால் விமான‌ நிலைய‌ வ‌ளாக‌த்திலேயே முறையான‌ உண‌வின்றி உற‌ங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

இதில் இந்தியா, ப‌ங்க‌ளாதேஷ், இல‌ங்கை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாட்டு தொழிலாள‌ர்க‌ளும் அட‌ங்குவ‌ர்.

தொழிலாள‌ர்க‌ளை க‌த்தார் நாட்டுக்கு அனுப்பும் நிறுவ‌ன‌ங்க‌ள், வேலைவாய்ப்பு அளித்துள்ள நிறுவ‌ன‌த்திற்கு முறையான‌ த‌க‌வ‌ல் த‌ராத‌தே இதற்குக் கார‌ண‌ம்.

இதுகுறித்து க‌த்தார் நாட்டு தொழிலாள‌ர் ந‌ல‌த்துறை கூறுகையில், இது குறித்து அவ‌ர்க‌ள‌து நிறுவ‌ன‌த்திற்கு ப‌ல‌முறை த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்டும் அவ‌ர்க‌ள் தொழிலாளர்களை அழைத்துச் செல்லாம‌ல் தாம‌தப்ப‌டுத்தி வருகின்றனர்.

இதனால் தான் தொழிலாள‌ர்க‌ள் விமான‌ நிலைய‌த்திலேயே த‌ங்கும் சூழ்நிலை நில‌வுகிற‌து என‌்றனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.