வி.ஐ.பி.,க்களுக்கு துப்பாக்கி சப்ளை பீகார் பெண் உட்பட இருவர் கைது*மூன்று துப்பாக்கிகள்,70 தோட்டாக்கள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி வி.ஐ.பி. ,க் களுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பீகார் பெண் உட்பட இருவர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகள், 70 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடியில் கடந்த டிச., 28ம் தேதி ஐந்து நவீன கைத்துப்பாக்கிகள், 33 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்ற சரவணக்குமார்(32), மாயாண்டி(33), பழனிக்குமார்(35), மணிமாறனை(45) கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை அம்பத்தூர் ராமபுரத்தில் துணிக்கடை வைத் துள்ள பீகார் மாநிலம் பேட்யா மாவட்டம் அவதேஸ் மனைவி நிர்மலா(43), அவரது உதவியாளர் செல்வம்(36) ஆகியோரிடமிருந்து ஒரு துப்பாக்கி ரூ.1.25 லட்சம், ஒரு தோட்டா 300 ரூபாய் என விலை கொடுத்து வாங்கியது தெரியவந்தது. சென்னை சென்ற டி.எஸ்.பி.,(பயிற்சி) சண்முகம், இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையிலான போலீசார் அங்கு நிர்மலா, செல்வத்தை கைது செய்தனர்.

இருவரிடம் இருந்தும் “9 எம்.எம்.,’ வகையிலான தலா ஒரு கைத்துப்பாக்கி, சென்னை ஊரப்பாக்கம் ஊராட்சித்தலைவர் ஜி.என்.ஆர்., குமார் தோட்டத்தில் புதைக்கப் பட்ட ஒரு துப்பாக்கி என மூன்று துப்பாக்கிகளையும், 70 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். நேற்று நிர்மலா, செல்வம் தூத்துக்குடி கொண்டுவரப்பட்டனர். தூத்துக்குடி எஸ்.பி., தீபக் டாமோர் கூறுகையில்,” நிர்மலாவின் கணவர் அவதேஸ் பீகாரிலுள்ளார். அவரிடமிருந்து நிர்மலா, செல்வம் துப்பாக்கிகளை வாங்கி சப்ளை செய்துள்ளனர். அவதேஸை பிடித்தால் தான் அந்த துப்பாக்கிகள் நேபாளத்தில் தயாரிக்கபட்டவையா? அல்லது பீகாரில் தயாரிக்கப்பட்டவையா? எனத்தெரியவரும்.

எனவே தனிப்படை போலீசார் விரைவில் பீகார் செல்லவுள்ளனர். கடந்த 28ம் தேதி தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து துப்பாக்கிகளில் ஒன்று வக்கீல் சங்க தலைவர் பிரபு வீட்டிலிருந்தும், மேலும் இரண்டு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் கருணாகரன் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டவை. அவர்கள் தற்காப்பிற்காக வாங்கி வைத்துள்ளனர். இவ்வழக்கில் அரசியல் தலையீடு கிடையாது. துப்பாக்கி வாங்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்’ என்றார்.

நிர்மலா, செல்வம் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். கடந்த 28ம் தேதி கைதான நால்வரை மேல் விசாரணைக்காக போலீசார் காவலில் எடுக்கவுள்ளனர். தலைமறைவாக உள்ள ஜி.என்.ஆர்.,குமார், ஜனாதிபதியிடம், சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது வாங்கியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.ட்பட இருவர் கைது*மூன்று துப்பாக்கிகள்,70 தோட்டாக்கள் பறிமுதல்

Source &   Thanks :   dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.