‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (07.01.09) செய்திகள்

 கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு எதிராக குற்றப் பிரேரரணையைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கு மாகாணசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் கிழக்கு மாகாண ஆளுநரை விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு சிங்கள இனத்தவர்களான ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் ஜே வி பி உறுப்பினரும் இதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்கள்.
மாகாணசபையின் அதிகாரப்பகிர்வுக்கு எதிராக செயற்படுவதாக கூறியே ஆளுநருக்கு எதிராக குற்றப்பிரேரணை தாக்கல் செய்யப்படவுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் அதிகமான சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சுமார் 1,500 பௌத்த விகாரைகள் இருந்துள்ளன.
அதேபோல் சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1,500 வாவிகள் அங்கு உள்ளனஎன்று ஜாதிக ஹெல உறுமய நேற்று நாடாளுமன்றில் கூறியது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரரே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:-
மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஜனாதிபதி. அவரால்
மாத்திரமே நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை ஒழித்து, பாதுகாப்பைப் பலப்படுத்தவும், நாட்டை அபிவருத்தி செய்யவும் முடியும்.
புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. அவர் இந்த நாட்டில் இன்னும் 20 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கவேண்டும்.
அவ்வாறு அவர் 20 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும்என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய விஷேட பேட்டியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறுகையில்;
புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்தபோது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அதுமரணத்தின் முத்தம்என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியின் பகல்கனவு என புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியையும் பிடித்திருக்கிறோம்.
எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்கலென கூற முடியும்.
பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது தான் பகல் கனவாக இருக்குமென நான் நம்புகிறேன்.
இதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டில் யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கில் ஏனைய 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் உயிரிழந்திருக்கின்றனர்.
பெரியதொரு கெரிலா இயக்கத்துடன் யுத்தம் புரியும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளை பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றியாகும் என்று கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளைவான்களில் வந்த ஆயுததாரிகளினால் இரு இளைஞர்கள் வெவ்வேறு இடங்களில் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றுக்கு ஆட்டோவில் சென்ற திருக்கோவில் வினாயகபுரத்தைச் சேர்ந்த 25 வயதான வர்ணகுலசூரிய பெர்னாண்டோ என்பவரும்,

கல்முனை கடற்கரை வீதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் கிரிதரன் வயது 25 என்பவருமே இவ்வாறு கடத்தப்பட்டவர்களாவார்.

இவர்களில் பெர்னாண்டோ என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருந்த வேளையில் கருணா குழுவின் தொல்லைகளினால் அக்கரைப்பற்று காவல்நிலையத்தில் சரணடைவதற்காக தாயாருடன் ஆட்டோவில் சென்ற வேளையில் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதே வேளை மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த சனிக்கிழமை காலை 7.00மணியளவில் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்விரு இளைஞர்களும் கடத்திச் செல்லப்பட்டதைப் பொதுமக்கள் கண்டுள்ளனர். இக் கடத்தல் சம்பந்தமாக அதிரடிப் படை முகாமில் உறவினர்கள் முறையிட்டதாகவும் கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட இளைஞர்கள் கந்தசாமி தர்சன் வயது 19, கனகரட்ணம் பிரபாநந்தன் வயது 20 ஆகிய இரண்டு பேரும் தினமும் கிரனைட் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பிரபாநந்தன் என்பவர் ஏற்கனவே போலியோ நோயினால் பீடிக்கப்பட்டவராவார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக வன்னி மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் பின்னர் அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நாடுகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் ரீதியான தீர்வு எட்டப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரபாகரனை கைது செய்தால் இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
படையினர் தொடர்ச்சியாக ஈட்டிவரும் வெற்றியைத் திசை திருப்ப இப்போது சர்வதேச சக்திகள் முயற்சி செய்கின்றன. அதற்காகவே அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் புலிகளுடன் பேச்சு நடத்துமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்தக் கோரிக்கைகளை நாம் முறியடிக்க வேண்டும். இதற்கான சக்தி எம்மிடமுண்டு. இந்த முறியடிப்பு முயற்சிக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.
நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்தே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:-
புலிகளை யுத்தத்தால் தோற்கடிக்க முடியும் என்று அப்போது நாம் சொன்னது இப்போது உண்மையாகிவிட்டது. இப்போது எமது படையினர் புலிகளைத் தொடர்ந்தும் தோற்கடித்துக் கொண்டு வருகின்றனர்.
புலிகளின் கோட்டையான கிளிநொச்சி வீழ்ந்தமை புலிகளுக்கு விழுந்த பாரிய அடியாகும். இது தேசப்பற்றாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் எமது நடவடிக்கைகளை ஒருபோதும் நிறுத்த முடியாது. புலிகள் ஒழித்துக்கட்டப்படும்வரை யுத்தம் முன்னெடுக்கப்பட்டே தீரவேண்டும். இதற்குத் தடை விதிக்கும் சக்திகள் அனைத்தும் அழித்தொழிக்கப்படவேண்டும்.
கிளிநொச்சி மீட்பு வெற்றியை நாம் வங்குரோத்து நிலையில் இருந்துகொண்டு கொண்டாடக்கூடாது. தமிழர்களையும் சேர்த்துக் கொண்டுதான் நாம் இதைக் கொண்டாட வேண்டும்.
தமிழர்களும், தமிழத் தேசியக் கூட்டமைப்பினரும் சிங்களவர்களுடன் சேர்ந்து செயற்படக்கூடிய வழி வகைகளை நாம் செய்துகொடுக்க வேண்டும்.
வடக்கு மக்கள் பிழையான தலைமைத்துவத்தின் கீழ் இருந்துபிழையான தமிழீழக் கனவில் இருந்து விடுபட்டு எம்முடன் வந்து இணைய வேண்டும் என நாம் அவர்களுக்குப் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். – என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமானறோவின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணித்து வருகின்றன.
சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உளவு வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்திய உளவு அமைப்பான றோவின் இரகசிய பிரிவுகளில் ஒன்றான வான் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானூர்தி ஜனவரி 3 ஆம் நாள் அதிகாலை 3:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வடபோர்முனையின் கரையோர பகுதிகளை அடைந்து கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இந்த வானூர்தி பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பாது வேறு வானூர்தி நிலையம் ஒன்றில் தரையிறங்கியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த வானூர்திகளில் துல்லியமாக படங்களை எடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முகில் கூட்டங்களின் ஊடாக தரையில் நடைபெறும் சம்பவங்களை படம் பிடிக்கும் தகமை கொண்ட இந்த ஒளிப்பட சாதனங்கள் சிறிய வாகனங்களையும், மனித நடமாட்டங்களையும் காண்காணிக்க கூடியது.
இந்திய உளவு அமைப்பின் இந்த வான் ஆய்வு மையத்தை சேர்ந்த வானூர்திகளை உளவு நிறுவனங்களை சேர்ந்த வானோடிகளே செலுத்துவதுண்டு, அதனை வான்படை வானோடிகள் செலுத்துவதில்லை.
மேலும் அவை குறிப்பிட்ட ஒரு நிலையத்தை பயன்படுத்துவது கிடையாது, பொதுமக்கள் பயன்படுத்தும் வானூர்தி நிலையங்களையும், வான்படையின் நிலையங்களையும் மாறி மாறி பயன்படுத்துவது உண்டு.
இதனிடையே, வான் ஆய்வு மையத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக தமக்கு சிறிதளவான தகவல்கள் தெரியும் என சென்னை வானூர்தி நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு ஒரு நிலையத்தில் இருந்து வந்த வானூர்தி ஒன்றே சென்னை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!*
சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையான முரளிதரன் (கருணா) தரப்பினரின் ஆயுதங்கள் பெப்ரவரியில் களையப்படும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுதங்களைக் களைந்தால்மறுவாழ்வு என்ற பெயரில் பெருந்தொகையை வெளிநாட்டு அமைப்புக்கள் அளிப்பதாக உறுதியளித்திருந்தன. ஆனால் இது தொடர்பான நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆயுதக் களைவு நிகழ்ச்சியை நடத்தி விட்டதால் பெருந்தொகை நிதியும் வரத் தொடங்கும் என்று கருதுவதால் பெப்ரவரியில் இந்நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.
ஆயுதக் களைவு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒருமுறை தொகை வரத் தொடங்கிவிட்டால் இலங்கை முழுவதும் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி வெளிநாடுகளை ஏமாற்றி பெருந்தொகையை நிதியைப் பெற்றுவிடலாம் என்று சிறிலங்கா தரப்பினர் கருதுவதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்வது குறித்த தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் புலிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது முல்லைத்தீவு பகுதியில் மட்டும் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில், புலிகள் மீதான தடையுத்தரவு அறிவிக்கப்படவுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விடுதலைப் புலி அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முகமாலை இரண்டாவது முன்னரங்கில் 500 மீற்றர் தூரத்தை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் நேற்றுக் கொண்டுவந்தனர் என்று படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது.
நேற்று அதிகாலை ஆட்டிலறி மற்றும் கடும் பிற்களச் சூட்டாதரவுடன் படைத்தரப்பின் 53 ஆவது மற்றும் 55 ஆவது படைப்பிரிவுகள் முகமாலை முன்னரங்கை நோக்கி நகர்வை மேற்கொண்டன என்றும்
இச்சமரில் விடுதலைப் புலிகள் பலர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் படைத்தரப்பில் கூறப்பட்டது.
தற்போது கைப்பற்றப்பட்ட பகுதியை இராணுவத்தினர் பலப்படுத்தி வருகின்றனர் என்றும் சில இடங்களில் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்று வருவதாகவும் படைத்தரப்பில் கூறப்பட்டது. எனினும் இந்தத் தகவல்களை சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி நகரம் அரச படைகளால் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை அவசரமாக முன்வைக்குமாறு பிரிட்டன் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் சகல சமூகங்களும் சுபிட்சமடைவதற்கு வலுவானதும் நிலையானதுமான சமாதானத்தை எட்டுவதற்கு இதுமட்டுமே வழிமுறை என்று பிரிட்டிஷ் தூதரகம் நேற்று செவ்வாய்க் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வெளிவிவகார, பொதுநலவாய அலுவலக பிரதியமைச்சர் மல்லோபிரவுண் பிரபுவும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டரும் இணைந்து இந்த அறிக்கையை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி வீழ்ச்சி கண்ட பின்னரான நிலைமைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நெருக்கமாக அவதானித்து வருகிறது.
சகல சமூகங்களினதும் நியாய பூர்வமான கவலைகளை தீர்த்து வைப்பதற்கான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு சகல தரப்பினரும் முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் அவசரமானதென்பதை தற்போதைய முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமான பாதிப்பு குறித்து நாம் கவலையுடன் இருக்கிறோம். சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளுக்கு அமைவான கட்டுப்பாடுகளுக்கேற்ப சகல தரப்பும் செயற்படவேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவசரகால சட்ட நீடிப்பு மீதான விவாதத்தின் போது படையினரின் இழப்புக்கள் குறித்து சபையில் தெளிவுபடுத்துவதே அரசாங்கத்தின் கடப்பாடாகும். ஆனால், இன்று அர்ப்பணிப்பும் தியாகமும் நிறைந்த கிளிநொச்சி மீட்பு குறித்து உரையாற்றிய பிரதமர் படையினரின் தியாகங்கள் குறித்து குறிப்பிடவே இல்லை. இது நாட்டையும் அர்ப்பணிப்பாளர்களின் பெற்றோரையும் அவமதிக்கின்றதும் ஏமாற்றுகின்றதுமான நடவடிக்கையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.

கிளிநொச்சி மீட்கப்பட்டிருப்பதோடு நிறுத்திவிடாது அதனைத் தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளுக்கு சுயாட்சி கோரும் சிறிலங்கா, இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிக்கான சுயாட்சியை மறுப்பது ஏன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:
அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை விரைவில் முன்வைக்காது போனால் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு கலைக்கப்பட வேண்டும்.
பல்வேறு பிரச்சினைகளில் 98 வீதமான முடிவுக்கு வந்துள்ள பிரதிநிதிகள் குழு இனியும் அதிகாரப் பகிர்வைத் திட்டத்தை தாக்கல் செய்ய தாமதிப்பதில் அர்த்தமில்லை.
இஸ்ரேல் நாட்டால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடத்தப்படும் தாக்குதலைப் போன்றதே இலங்கையிலும் நடைபெறுகிறது. காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளுக்கு சுயாட்சி வழங்கக் கோரும் சிறிலங்கா, இலங்கையின் வடகிழக்குப் பகுதிக்கு சுயாட்சி வழங்க தயாராக இல்லை.
கிளிநொச்சியைக் கைப்பற்றியதைக் கொண்டாடுமாறும் தேசியக் கொடியை ஏற்றுமாறும் பலரும் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உணரும் நிலையில் வெடி வெடித்து கொண்டாடும் தருணம் இதுவல்ல என்றார் அவர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 53 இலங்கை மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவிற்கும் அந்நாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்து படகுகளுடன் 53 மீனவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!
india
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இ‌ன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதனா‌ல் அர‌சிய‌ல் க‌ட்‌சி‌யின‌ர் உ‌ச்ச க‌ட்டபிரசார‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடை‌கிறது. 9ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 190 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. 500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 12ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இன்று மாலை 5 மணிக்குள் பிரசாரம் முடிக்கவும், அதன் பிறகு தொகுதிக்குள் தங்கியுள்ள வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏ‌ற்கனவே உத்தரவிட்டுள்ளது. தொகுதியில் உள்ள எல்லா திருமண மண்டபங்களும் சீல் வைக்கப்படுகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 476 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 800 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக இன்று இரவு சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அய‌ல்நாடுவாழ் இந்தியர்களின் 3 நாள் மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. மாநாட்டை நடத்தும் அமைப்புக்கு கடந்த வாரம், .மெயிலில் மிரட்டல் வந்ததால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், இன்று இரவு 9.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌‌சி‌‌‌ங் பர்னாலா, முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் வரவேற்கின்றனர். இரவு ஆளுந‌ர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை நந்தம்பாக்கத்தில் நடக்கும் மாநாட்டில் சிறப்புரை ஆற்றும் பிரதமர், அங்கிருந்து மதுரவாயல் சென்று தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் திருவனந்தபுரம் செல்கிறார். குடியரசு‌த் தலைவ‌ர் பிரதிபா பாட்டீல், வரு‌ம் 9ஆம் தேதி காலை தனி விமானத்தில் சென்னை வருகிறார். அன்று இரவே டெல்லி புற‌ப்ப‌ட்டு செ‌ல்‌கிறா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வேலைநிறு‌த்த‌த்‌தி‌‌‌ல் தொட‌ர்‌ந்து ஈடுப‌டு‌ம் லா‌ரிக‌ளை‌ப் ப‌றிமுத‌ல் செ‌ய்து இய‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

வேலைநிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வரு‌ம் லா‌ரிக‌ளி‌ன் உ‌ரிம‌ங்க‌ள் ர‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு நே‌ற்று எ‌ச்ச‌ரி‌‌க்கைவிடு‌த்தது.

ஆனா‌ல் ம‌த்‌திய அர‌சி‌ன் எ‌ச்ச‌ரி‌க்கையையு‌ம்மீ‌றி லா‌ரிக‌ள் வேலைநிறு‌த்த‌ம் இ‌ன்று மேலு‌ம்தீ‌விரமடை‌ந்தது. டீச‌ல்விலை குற‌ை‌ப்பு உ‌ள்‌ளி‌ட்ட த‌ங்க‌ளி‌ன் ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளைநிறைவே‌ற்று‌ம் வரை வேலைநிறு‌த்த‌த்தை‌க் கை‌விட மா‌ட்டோ‌ம் எ‌ன்று லா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
இலக்கை அடையும் வரை தாக்குதல்கள் தொடரும் இஸ்ரேல்இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக யூதச் சிறுவர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இஸ்லாமிய போராளிகளினால் கொல்லப்படுவார்களென ஹமாஸ் எச்சரித்துள்ளது.
பாலஸ்தீன சிறுவர்களை கொல்வதன் மூலம் தமது சிறுவர்களின் கொலைகளுக்கு நியாயபூர்வமான அங்கீகாரமொன்றை இஸ்ரேலியர்கள் வழங்கியிருப்பதாக ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூட் ஷாகர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவையொன்றுக்கு இரகசிய இடமொன்றிலிருந்து வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ள ஷாகர் எமது மக்களைக் கொல்வதன் மூலம் அவர்களது மக்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் கொல்லப்படுவதற்கான உரிமையை வழங்கியிருக்கிறார்களெனவும் தெரிவித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக வழங்கப்பட்டுள்ள இப்பேட்டியில் கடவுளின் ஆசியுடன் வெற்றியை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம், அரேபிய நாடுகள் மற்றும் .நா.ஆகியவை தீவிரமாக மேற்கொண்டு வருகின்ற போதும் காஸா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தனது இரண்டாவது மகனும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பதை தான் பார்க்க விரும்புவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.
செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ள எச்.டபிள்யூ புஷ் புளோரிடாவின் முன்னாள் ஆளுநரும் தனது இரண்டாவது மகனுமான கெப் புஷ் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புளோரிடா மாநில செனட்டர் மெல் மார்ரிறெஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இப் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பில் தான் ஆராய்ந்து வருவதாக கெப்புஷ் (வயது 55) தெரிவித்துள்ளார்.
ஜோர்ஜ் எச்.புஷ் மேலும் தெரிவிக்கையில்;
கெப் இப் பதவிக்கு போட்டியிட வேண்டுமென நான் விரும்புகிறேன். அவர் ஒரு நாளில் ஜனாதிபதியாகவோ அல்லது செனட்டராகவோ பதவி வகிப்பதைக் காண விரும்புகிறேன். நிச்சயம் அதனைக் காண்பேன் ஆனால் தற்போதைய தருணம் அதற்கு உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 ஹமாஸ், இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை செலுத்தப் பெற்றிருக்கும் திறனை முழுமையாக இஸ்ரேல் அழிக்கும் வரை, காசா நிலப்பரப்பு மீது இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஒல்மர்ட் கூறியுள்ளார்.
பல ராக்கெட் தாக்குதல்களுக்கு இலக்கான தென் இஸ்ரேலிய நகரான இஸ்தெராட் நகருக்கு விஜயம் செய்தபின்னர் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
காசாவில் இனி ஆயுதங்கள் எதுவும் கடத்தப்படாத நிலை ஒன்று உருவாவதுதான் இந்த இஸ்ரேலிய தாக்குதலின் விளைவாக இருக்க வேண்டும் என்று ஒல்மெர்ட் கூறினார்.
ஆயுதக்கடத்தல் நின்று, ராக்கெட்டுகள் வீசப்படுவதும் நிற்கும்போதுதான், இஸ்ரேலிய தாக்குதல் நிற்கும் என்று அவர்
!!!!!!!!!!!!!!!!!!!
ஏடன் வளைகுடாவில் கப்பல் போக்குவரத்தை சோமாலிய கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை சீன போர்க்கப்பல்கள் தொடங்கியுள்ளன.
இதுதான் பசிபிக் பிராந்தியத்துக்கு அப்பால் சீன கடற்படை, சமீப தசாப்தங்களில், தீவிரமான அளவில் ஈடுபடும் சம்பவமாகும்.
இரண்டு சீன தாக்கியழிக்கும் போர்க்கப்பல்களும், ஒரு வழங்கல் கப்பலும், கடந்த ஆண்டில் மட்டும், 100க்கும் மேலான சம்பவங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சோமாலிய கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் வழிகளின் ஊடாகச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு தரும் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ல பல்வேறு நாடுகளுடன் சேர்ந்துகொள்ளும்.
இந்த நடவடிக்கை, சீனா தனது அண்டை நாடுகளை கோபமூட்டாமல், உலகப் பாதுகாப்பில் மேலும் கூடுதல் பங்காற்றுவதற்கு கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பம் என்று பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!
1euro = 153.70 sl / 65.42in
1us $ =113.75sl /43.42in
1swiss fr =101.89sl /43.37in
1uk pound =169.67sl /72.22in

Leave a Reply

Your email address will not be published.