மியூசிக் போனை அறிமுகப்படுத்தியது நோக்கியா

சென்னை : இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒரு புது மாடல் மொபைல் போனை நோக்கியா நேற்று சென்னையில் அறிமுகம் செய்திருக்கிறது. உலகில் அதிகள் மொபைல் போனை விற்பனை செய்யும் நோக்கியா, சென்னையில் நேற்று அதன் புது மாடல் சியூசிக் போன் நோக்கியா 5800 ஐ அறிமுகம் செய்தது. எக்ஸ்பிரஸ் மியூசிக் வரிசையில் வந்திருக்கும் இந்த மொபைல் போனில் ஏ.ஆர்.ரஹ்மானின் லேட்டஸ்ட் ஆல்பம் ‘ கனெக்சன்ஸ் ‘ பதிவு செய்யப்பட்டிருக்கும்.

தனது 43 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான், இந்த போனையும் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். ரூ.21,899 விலையுள்ள இந்த மொபைலில், ஹை ரெஸூலுஷனுடன் கூடிய 3.2 இஞ்ச் டிஸ்ப்ளே பேனல், சரவ்ன்ட் சவுண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், கார்ல் ஸீயஸ் லென்ஸ் பொருத்தப்பட்ட 3.2 மெகா பிக்ஸல்ஸ் கேமரா, 8 ஜிபி மெமரி கார்ட் இருக்கிறது. இந்த புது மாடல் மொபைல் போன் நோக்கியா கான்செப்ட் ஸ்டோர்கள், நோக்கியா பிரையாரிட்டி ஸ்டோர்கள், மற்றும் தென் இந்தியாவில் இருக்கும் மற்ற நோக்கியா ஸ்டோர்களில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரெக்கார்டுகள், பின்னர் கேசட்கள், அதன்பின் சி.டி., என்று வளர்ந்து வந்த இசை வடிவம், இப்போது டவுண்லோட் என்று கடந்த 20 ஆண்டுகளாக எப்படி இசை கேட்கும் வசதி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை சொன்னார் ரஹ்மான். ஒன்பது டிராக்களை கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ கனெக்ஸன்ஸ் ‘ இந்த மொபைல் போனில் மட்டுமே பதிவு செய்து வெளிவந்திருக்கிறது. இந்த போன் குறித்து பேசிய நோக்கியா இந்தியாவின் ரீஜனல் ஜெனரல் மேனேஜர் ( மார்க்கெட்ஸ் ) டி.எஸ்.ஸ்ரீதர், இந்த மியூசிக் போன் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புவதாக சொன்னார்.

Source  &   Thanks :  dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.