கிளிநொச்சியை இழக்கக் கூடாது- புலிகளின் வான்படையை அழித்தாக வேண்டும்: ஐ.தே.க. விருப்பம்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட பகுதிகளை கடந்த காலங்களைப் போல மீண்டும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர்களின் வான்படையை அழித்தாக வேண்டும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட முன்வடிவின் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திச அத்தநாயக்க பேசியதாவது:

படைகளில் இருந்து தப்பியோடியவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறோம். ஏன் அவர்களுக்கு நாம் மறுவாழ்வு அளிக்கக்கூடாது?

ஐக்கிய தேசியக் கட்சியானது எப்போதுமே பயங்கரவாதத்தை எதிர்க்கும். பயங்கரவாத பேயை அழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும்.

கடந்த காலங்களைப் போல் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் விடுதலைப் புலிகள் கைகளில் விழுந்துவிடக் கூடாது.

விடுதலைப் புலிகளின் வான்படையை அழிக்க வேண்டிய அவசிய உள்ளது. இதுவரை விடுதலைப் புலிகளின் வான்படையை அழித்துவிட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசாங்கம் கண்டிப்பாக கவனம் செலுத்த வேஎண்டும் என்றார் அவர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.