ஷேக் ஹசீனா பிரதமரானார்: 23 அமைச்சர்களும் பதவியேற்பு

தாகா: வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமராக நேற்று பதவியேற்றார்.வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா(62). இவரது கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக நேற்று பதவியேற்றார்.வங்கதேச அதிபர் இஜாஉதீன் அகமது, அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் 23 அமைச்சர்கள் மற்றும் எட்டு இணையமைச்சர்கள் பதவியேற்றனர்.

பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாகா உடனடியாக ஒதுக்கப்படவில்லை.ஷேக் ஹசீனாவின் அமைச்சரவையில் முன் அமைச்சர்களாக இருந்தவர்கள் தற்போது ஒரங்கட்டப்பட்டு, புது முகங்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ஷேக் ஹசினாவின் இளைய சகோதரி ஷேக் ரெகனா, முன்னாள் ஆலோசகர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முப்படை தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உட்பட 900 பேர் கலந்து கொண்டனர்.ஷேக் ஹசீனா 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை வங்கதேச பிரதமராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.

இதுகுறித்து அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறுகையில், “அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, மக்கள் வாங்கும் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஊழல், பயங்கரவாதம் மற்றும் இதர குற்றங்களை அகற்ற கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது’ என்றனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.