முல்லைத்தீவில் சறுக்கல்-பின் வாங்கும் ராணுவம் (07.01.2009) செய்திகள்.

கொழும்பு: முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் முயற்சியில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கடுமையாக தாக்கி வருவதால் ராணுவம் தற்காலிகமாக பின்வாங்கியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம் புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமேடு பகுதியில் இருந்து கொருடமேடு நோக்கி ராணுவத்தினர் முன்னேற முயற்சி மேற்கொண்ட போது, அவர்களை விடுதலைப் புலிகள் தாக்கினர்.

இதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 11 பேர் காயம் அடைந்ததாகவும் விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையதளம் கூறியுள்ளது.

ராணுவத்தினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தன் அருகே விடுதலைப் புலிகள் மண் அரண்களை எழுப்பி அங்கிருந்து கிளிநொச்சி நோக்கி தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனை இறவு பகுதியை கைப்பற்றுவதிலும், முல்லைத்தீவு நோக்கிய முன்னேற்றத்திற்கும் விடுதலைப் புலிகளிடமிருந்து கடும் பதிலடி கிடைத்து வருவதால் ராணுவம் பின் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.