‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (06.01.09) செய்திகள்

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமடு பகுதியில் இருந்து கொருடமடு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கற்சிலைமடு பகுதியில் இருந்து நேற்று முன்னாள் ஞாயிற்றுக்கிழமை செறிவான பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைத் தாக்குதல்களின் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தி படை நகர்வினை முறியடித்தனர்.
இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவில் ஆண்டு காலத்தில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீடிக்க நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடுகிறது.
அவசரகாலச் சட்ட நீடிப்பைத் தாக்கல் செய்யும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வடபோர்முனையில் கொல்லப்பட்ட படையினர் மற்றும் படுகாயமடைந்தோரின் எண்ணிக்கையை வெளியிடுவார்.
கடந்த வாரம் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவசரகால சட்டத்தை முதலில் தாக்கல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தக் கூடிய புதிய மூன்றாம் சக்தி ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதென ஆசிய மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இதுவரையில் ஆட்சியிலிருந்த பெரும்பான்மை கட்சிகள் ஜனநாயக விழுமியங்களைப் பேணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனநாயகம் மற்றும் சட்டம், ஒழுங்கு என்பன சீர்குலைந்துள்ளதென அது குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதப் பிரச்சினைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் நிலவும் சமூக பிரச்சினைகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், இதனை சீர் செய்யக் கூடிய வல்லமையுடைய ஆட்சி முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி களமுனைகளில் பெருமளவிலான சிறிலங்கா படையினர் காயமடைந்து வருவதை தொடர்ந்து அவர்களை இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளின் மூலம் படைத்தரப்பு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் கூறப்படுவதாவது:
வன்னி களமுனைகளில் காயமடையும் பெருமளவிலான படையினர் இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
படையினரின் தேவைகளுக்கு போதுமான நோயளர் காவு வாகனங்கள் இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ள போதும் படையினர் பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படங்களுடன் ஆதாரப்படுத்தியுள்ளது.
அக்கட்சியினால் வெளியிடப்பட்ட படங்களில் பெருமளவான படையினர் பேருந்துகளில் பயணிப்பதும், அவர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியை கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த போது அங்கு காணமல் போன படையினரின் 8 உடலங்களை கைப்பற்றியுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரணைமடு பகுதியை கடந்த வியாழக்கிழமை கைப்பற்றிய 57-4 பிரிகேட் படையணிகள், கடந்த வாரம் அங்கு காணாமல் போன படையினரின் 8 உடலங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, பரந்தனுக்கு கிழக்காக விடுதலைப் புலிகள் மண் அணைகளை அமைத்து வருகின்றனர்.
மேலும் 1,000 பேரை முல்லைத்தீவை நோக்கியும் நகர்த்தியுள்ளனர்.
அதேவேளை, கடந்த 10 நாட்களாக விடுதலைப் புலிகள் அதிகளவில் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் ஏவும் பீரங்கி எறிகணைகள் கிளிநொச்சி நகர் பகுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கின்றன.
எனவே, கிளிநொச்சியின் பாதுகாப்புக்களை பலப்படுத்த சிறிது காலம் எடுக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2:30 நிமிடமளவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டடத்தை சுற்றிவளைத்துக்கொண்ட குண்டர் குழு ஒன்றே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிகின்றது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது அங்கிருந்த பணியாளர்கள் பலரும் ஓடித் தப்பியதாகத் தெரிகின்றது. தாக்குதல் நடத்த வந்தவர்கள் துப்பாக்கிகள், பெற்றோல் குண்டுகள் போன்றவற்றை தம்வசம் வைத்திருந்ததாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலையகத்தை தாக்கியவர்கள் நிறுவனத்தின் பிரதான கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தீ வைத்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளையில் கட்டுப்பாட்டு நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டதனால் கலையகத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ள அதேவேளையில் கலையகத்திலிருந்து நடைபெறும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிகாலையில் வானொலிச் சேவைகள் அனைத்தும் செயலிழந்துள்ளன. தீ அணைக்கும் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எம்.ரி.வி. நிறுவனம் மூன்று மொழிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், பண்பலை அலைவரிசை வானொலிச் சேவைகளையும் மூன்று மொழிகளிலும் நடத்தி வருகின்றது.
அரசாங்கத்தின் மீது அதிகளவுக்கு விமர்சனங்களை முன்வைப்பதால் இந்நிறுவனத்தின் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்மைக்காலத்தில் சீற்றமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!!
,NjNtisapy; எம்.டி.வி, எம்.பி.சி கலையகங்கள் மீது இன்று காலை ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார்.

அதேவேளை இன்று காலை ஆரம்பமான 2009 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வில் எம்.பி.சி, எம்.ரி.வி கலையகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி தலைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை புதன்கிழமை கூடுகின்ற அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படவிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. .

புத்தாண்டிற்கான முதலாவது அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை இரவு கூடவிருக்கின்றது. கிளிநொச்சியை கைப்பற்றியுள்ள நிலையில் புலிகள் மீது அரசாங்கம் தடைவிதிக்கலாம் என்று பரவலாக கூறப்பட்டது. புலிகளை அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடை செய்வதா? அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடை செய்வதா? என்பது தொடர்பில் அரசாங்கம் சட்ட ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. .

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள், அமைப்புகள் புலிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் துரிதநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே புலிகள் மீதான தடை தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்காவிடின் புலிகளை தடைசெய்ய நேரிடும் என்று புத்திஜீவிகளுக்கு மத்தியில் டிசம்பர் மாதம் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா படைக்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் பி.சமரசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.
பலாலி சிறிலங்கா படைய தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் அவர் படையினர் மத்தியில் உரையாற்றினார்.
யாழை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்னர் நியமிக்கப்பட்டுள்ள 15 ஆவது தளபதி இவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிலிருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக அக்கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை அவர் கூறியதாவது:
அனைத்துக் கட்சிக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இம் மாதத்தில் முடிவெடுக்க உள்ளது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் வழித் தீர்வு என்பது அவசியமனதாகும். ஆனால், அரசு அதில் அக்கறை செலுத்துவதாக இல்லை.
கிழக்கில் கிளிநொச்சி வீழ்ந்த கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு முஸ்லிம் வர்த்தகர்களை அரச தரப்பு வற்புறுத்தியிருக்கிறது. இத்தகைய செயற்பாடுகளின் மூலம் நல்லிணக்கம் என்பது பாரிய ஆபத்துக்குரியதாகிவிடும்.
எந்த ஒரு நபருக்கும் தேசப்பற்றை திணிக்கக் கூடாது.
கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் நடைபெற உள்ள போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரசும் பங்கேற்கும் என்றார் அவர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை விடுவிக்கக்கோரி யாழ் குடாநாட்டில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி xl;L FOf;fspdhy; ehlj;jg;glTs;sJ.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கம் அரசியல் நாடகமாடி வருவதாகவும் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் இறைமை, ஜனநாயகம், மக்களின் உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு நாளை புதன்கிழமை தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார்.
“பொறுத்தது போதும்’ எனும் தொனிப்பொருளில் நாளைய தினம் ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி வெற்றிக்காக படையினரைக் கௌரவிக்கும் முகமாக நாடெங்கிலும் அரச, தனியார் அலுவலகங்களிலும் பாடசாலைகளிலும் நேற்று திங்கட்கிழமை தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
இதேநேரம், கிளிநொச்சிக்கான சமரில் உயிரிழந்த படையினரைக் கௌரவிப்பதற்காக நேற்றுக் காலை 8.35 மணி முதல் 8.37 மணிவரை 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கௌரவிப்பு நிகழ்வுக்கான அழைப்பை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்திருந்தது.
இதற்கமைய நேற்றுக் காலை அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பாடசாலைகளிலும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. வீடுகள் மற்றும் கடைகளிலும் இவை பறக்கவிடப்பட்டன.
இதன்போது காலை 8.35 மணியளவில் நாடெங்கிலும் இரு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சகல பகுதிகளிலும் அந்த நேரத்தில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவை தொடர்பான நிகழ்வொன்று நேற்றுக்காலை பாதுகாப்பு அமைச்சிலும் இடம்பெற்றது. இதில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பணியாளர்கள், மதகுருமார்கள் கலந்துகொண்டனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார்.
நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லை.
இலேசாக மூடியிருந்த பிரதான கதவில் திறப்பு தொங்கவிடப்பட்டிருந்தது. கணினிகள், தொடர்பாடல் உபகரணங்கள், காகிதங்கள் என அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனரென அமுனுபுர கூறியதாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சஊழலை ஒழித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்எனக் கூறுவது சாக்கடையில் நின்றுகொண்டு நறுமணத்தை தேடுவதற்கு ஒப்பான செயலாகும் என்று ஜே.வி.பி.யின் முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் அஜித்குமார தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
பண்டாரவளையில் புத்தகமொன்றில் வெடிமருந்துப் பொருட்கள் வைத்திருந்தவரென்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாடசாலை ஆசிரியர், கொழும்பு பயங்கரவாதக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரினால் மேல் விசாரணைக்கென கடந்த 2 ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஆங்கிலப் புத்தகமொன்றில் இணைக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் மேற்படி ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் என்ற இடத்தைச் சேர்ந்தவரென்றும், அங்கிருந்து இருபது வருடங்களுக்கு முன் பண்டாரவளைக்கு வந்து வசிப்பவரென்றும் அவ்வேளையிலேயே பண்டாரவளை பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றி வந்தவரென்றும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
பண்டாரவளையில் தடுத்து வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவுற்ற பின்னரே மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னார் நகரப் பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது, சுமார் 20 தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
நேற்றுக் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை இச்சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே அவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 20 பேரையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் ஒப்படைத்தனர். நேற்று மாலை வரை கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கூடி நின்றிருந்தனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் நகரப் பகுதியில் 5 வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!
தாக்குதல்களை மேற்கொண்டு தப்பிச் செல்வதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒரே போர்த் தந்திரோபாயம் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரபாகரனுக்கு அரசியலில் பிரவேசிக்க அனுமதியளிக்கக் கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநேகமான இராணுவத் தளபதிகள் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது குறித்து விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான இராணுவத் தளபதிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் தூதுவர் பதவியொன்றையே விரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூநகரி பகுதியை கைப்பற்றிய இராணுவ அதிகாரி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளின் பட்டியலில் 45 ஆவது இடத்தை வகிப்பவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மாத்திரமே சாத்தியமானது எனத் தெரிவித்துள்ள ஜப்பான், கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை இராணுவ ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் .எவ்.பி. செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான உண்மையான தீர்வை அரசியல் வழிமுறைகள் மூலமாக மாத்திரமே காணமுடியுமென அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
வடக்குகிழக்கிற்கு உள்ளக சுயாட்சியை வழங்குவதன் மூலம் அரசியல் தீர்வொன்றைக் காண முயலுமாறு ஜப்பான் தொடர்ந்தும் இலங்கை அரசை வலியுறுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஜப்பான் இன்னமும் உத்தியோகபூர்வமாகக் கருத்து எதனையும் வெளியிடாததையும் சுட்டிக்காட்டியுள்ளார் அந்த அதிகாரி.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை ஒரு குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த விடயம் மாத்திரமே. இராணுவ ரீதியாக அதன் முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
INDIA
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ கோணத்தில் மட்டும் தீர்வுகாண முடியாது என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் வந்த பின்னர் இந்திய அரசு வெளியிடும் முதல் கருத்து இது.
இராணுவ ரீதியிலான வெற்றி என்பது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசியல் ரீதியான அம்சமும் உள்ளது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் நலமுடன் வாழும் வகையில் ஒரு அரசியல் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அந்தப் பாதையில் முன்னேற்றம் இல்லாமல் அங்கு அரசியல் தீர்வு குறித்து பேச இயலாது. என்று ஷிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.
தவிர இந்தப் பிரச்சினையில் மனிதாபிமான கோணத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த கோணத்திலும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் இந்தியா அக்கறை காட்டிவருகிறது என்றும் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருமங்கல‌த்‌தி‌ல் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்றவீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டதை தொட‌ர்‌ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருமங்கலம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் விதிமுறைகளை மீ‌றி வாக்காளர்களுக்குப் பணம், இலவச வே‌ட்டி, சேலைகள் உள்ளிட்டவ‌ற்றை க‌ட்‌சி‌யின‌ர் கொடு‌‌த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக வாக்காளர்களுக்கு தி.மு..வினர் தாராளமாக பணம் கொடுப்பதாக ...தி.மு..வும், அதுபோல் ...தி.மு..வினர் பணம் கொடுப்பதாக தி.மு..வும் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு..ஸ்டாலின் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்ததாக, இரு தொலைக்காட்சி சேனல்களில் ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடியவீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.

இத‌ன் அடிப்படையில் மு..ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆ‌ட்‌சியரு‌க்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தி.மு..வுக்கு தா‌க்‌கீது அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோ‌ல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக ...தி.மு..வை சேர்ந்த கோவை எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலர் தண்டபானி மீதும்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு‌ள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
வாக்காளர்களுக்கு பண‌ம் கொடு‌த்ததாக கூற‌ப்ப‌ட்ட கு‌ற்ற‌ச்சா‌ற்றை மறு‌த்து‌ள்ள அமைச்சர் மு..ஸ்டாலின், ‌பிரசா‌ரத்‌தி‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்தபோது பு‌திதாகபிற‌ந்த குழ‌ந்தை‌க்கு வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்துபிற‌‌ந்தநா‌ள் ப‌ரிசு கொடு‌த்தே‌ன் எ‌ன்று விளக்கம் அளித்துள்ளார்
திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அமை‌ச்ச‌ர் மு..‌ஸ்டா‌லி‌ன், எந்த வாக்காளர்களுக்கும் நான் பணம் கொடுக்கவில்லை எ‌ன்றா‌ர்.

நான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, புதிதாக பிறந்த குழந்தையை என்னிடம் கொடுத்து வாழ்த்து தெரிவிக்க கூறினார்கள். அந்த குழந்தைக்கு நான் பிறந்த நாள் பரிசு கொடுத்தேன். அதைத்தான் நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சொல்கிறார்கள் எ‌ன்றுமு..‌‌ஸ்டா‌லி‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

நான் ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு தான் கொடுத்தேன் என்பதற்கான ஆதாரம் எ‌ன்‌னிட‌ம் உள்ளது. தேவைப்படும் போது அந்த ஆதாரத்தை காட்டுவேன் எ‌ன்று அமைச்சர் மு..ஸ்டாலின் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில அமைப்புகள், கடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தக்குதல்களுக்கு துணை போயிருப்பதாக பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குற்றைசாட்டியுள்ளார்.

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில், நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், ராணுவ துல்லியத்தையும் பார்க்கும் போது, பாகிஸ்தான் அரசின் அமைப்புகளின் ஆதரவு உள்ளதாக பிரதமர் குறை கூறினார்.

மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக புதுடெல்லியில் இன்று மாநில முதலமைச்சர்களின் மாநாடு தொடங்கியுள்ளது.

இந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், பேசுகையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில அமைப்புகள் மீது குற்றம்சாட்டினார்.

மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாத காலத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நேரடியாக குற்றம்சாட்டியிருப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!
கிறி‌த்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்புக் கொடுக்க முடியாவிட்டால் பத‌வியை‌வி‌ட்டுவில‌கி விடுங்கள் என்று ஒரிசா அர‌‌சி‌ற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாதுஎன்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முத‌ன்மை அம‌ர்வு இவ்வாறு கருத்துக் கூறியது.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமானந்த சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட மதக் கலவரத்தை ஒடுக்குவதில் மாநில அரசு வேகம் காட்டவில்லை என்றும் நீதிபதிகள் குறை கூறினர்.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறி‌த்தவர்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்த பிறகு மிக தாமதமாக மாநில அரசு செயல்பட்டுள்ளது எ‌ன்றுநீ‌திப‌திக‌ள் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவிடம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு‌ள்ளது.

இவ்வளவு பெருந்தொகைக்கு அமெரிக்காவிடம் இந்தியா ஆயுதங்களை வாங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய கடற்படைக்கு 8 போயிங் பி-81 ரக விமானங்கள் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை இணைச் செயலர் பிரீத்தி சுதனும் போயிங் நிறுவன அமெரிக்கப் பிரிவின் தலைவருமான விவேக் லாலும் கடந்த 1ஆம் தேதி கையெழுத்திட்டனர்.
!!!!!!!!!!!!!!
world

!!!!!!!!!!!!!!!
காசாப் பகுதியிலுள்ள பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் நிலையில் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேசெல்கிறது.
காசா நிலப்பரப்பிலுள்ள மருத்துவமனைகளும் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகிவருகின்றன.
கடந்த சனிக்கிழமையன்று காசாப் பகுதி மீது இஸ்ரேலிய தரைப்படையினர் தாக்குதலை நடத்தத் தொடங்கியதிலிருந்து இதுவரை 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டடுள்ளவர்களில் 26 பேர் சிறார்கள்.
இந்தத் தாக்குதல் சம்பவங்களில் பலியாகியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் எனவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளனர் என்றும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு வரும் உடல்கள் சிதறிய நிலையிலும், சில சமயங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் வருகின்றன என்று காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவரான காமிஸ் அல் எஸி கூறியுள்ளார்.
மருத்துவ பணியாளர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால், காயமடைந்த பலரை அவர்களால் அணுக முடியவில்லை என்று அந்த மருத்துவர் கூறினார்.
இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்தது காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டியுள்ளதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலியத் தரப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் பாலஸ்தீன ரொக்கெட் தாக்குதலில் உயிரிழந்தனர

Leave a Reply

Your email address will not be published.