ஸ்டிரைக் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து: அரசு

புதுடெல்லி : லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய போக்குவரத்துத் துறை செயலாளர் பிரம்மதத் கூறியதாவது:

போராட்டத்தில் குதித்துள்ள லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் நியாயமற்றவை. அவை நிறைவேற்ற இயலாதவை. இதற்கான காரணத்தை நிதித்துறைச் செயலாளர், பெட்ரோலியத்துறைச் செயலாளர் ஆகியோருடன் நானும் விவரித்தோம்.

எனினும் லாரி உரிமையாளர்கள் தங்கள் பிடிவாதத்தைக் கைவிடவில்லை. லாரிகள் வேலை நிறுத்தம் இனியும் தொடர்ந்தால், பெர்மிட் ரத்து செய்வது உட்பட சட்டப்படியான நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொள்ளும்.

தற்போதைய லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு பிரம்மதத் கூறினார்.

Source & Thanks : in.tamil.yahoo.com

Leave a Reply

Your email address will not be published.