கொருடமடு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 5 படையினர் பலி; 11 பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமடு பகுதியில் இருந்து கொருடமடு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கற்சிலைமடு பகுதியில் இருந்து நேற்று முன்னாள் ஞாயிற்றுக்கிழமை செறிவான பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைத் தாக்குதல்களின் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தி படை நகர்வினை முறியடித்தனர்.

இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏகேஎல்எம்ஜி – 02
நடுத்தர ரவைகள் – 350

உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.