தேபாணமவில் அமைந்துள்ள எம்.டிவி சக்தி டிவி கட்டிடம் பாரிய தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 2:00 மணியளவில் தேபாணமவில் அமைந்துள்ள சக்தி, சிரச, எம்.டிவி காரியாலயக் கட்டிடம் வெள்ளை வானில் வந்த 20 மேற்பட்ட ஆயுதாரிகளின் தாக்குதலினால் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இக்கட்டிடத்துள் நுழைந்த ஆயுததாரிகள் உள்ளிருந்த ஒளிபரப்புக் கருவிகள் உட்பட பல பெறுமதி மிக்க இயந்திரங்களை சேதமாக்கியதுடன் அவற்றிற்குத் தீவைத்துத்துள்ளனர். அத்துடன் அங்கு அச்சமயத்தில் பணிபுரிந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுமுள்ளனர். தாக்குதலை முடித்துக் கொண்டு வெளியேறும் போது அங்கு பணிபுரிந்தவாகளிடம் கட்டிடத்திற்குள் யாராவது உள் நுழைய முயற்சித்தால் வெடிக்கவைக்கும் விதத்தில் வெடிகுண்டு பொருத்தியுள்ளதாகவும் பயமுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பணியாளர்கள் 119 க்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆயினும் பொலிசும், தீயணைப்புப் படையும் குண்டு அச்சுறுத்தல் காரணமாக உள் நுழையாது குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். அவர்கள் வந்து பரிசோதித்தபின்னே தீயணைப்புப் படையினர் உள் நுழைந்து தீயை அணைத்துள்ளனர். இது மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என அங்கு அச்சமயம் பணிபுரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்ற வாரமும் இக்காரியாலயத்தின் முன் அமைந்துள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரின் அறைமீது பெற்றோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜானா

இதற்குத் தானோ ஊடகத்துறையமைச்சு கைமாறியது????

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.