கிளிநொச்சியில் இலங்கை தேசியக்கொடி

கொழும்பு : புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றிய பின், அங்கு முதல் முறையாக நேற்று இலங்கை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.விடுதலைப் புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சியையும், ஆனையிறவு மற்றும் ஒட்டுச்சுட்டான் பகுதிகளை ராணுவம் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டில் மற்றொரு முக்கிய கிராமமான குறிஞ்சாடியையும் நேற்று ராணுவத்தினர் கைப்பற்றினர்.கிளிநொச்சியை கைப்பற்றியதை முறைப்படி பிரகடனப்படுத்தும் வகையில், அங்கு இலங்கை தேசியக் கொடியை ராணுவத்தினர் நேற்று ஏற்றினர். அத்துடன், போரில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. “டிவி’ ரேடியோ நிகழ்ச்சிகள் இரண்டு நிமிடங்கள் ரத்து செய்யப்பட்டன.தனியார் “டிவி’ ஒன்று, இலங்கை தேசிய கீதத்தையும் ஒளிபரப்பியது. பின்னர் ராணுவம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிளிநொச்சியை கைப்பற்றிய வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.