‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (05.01.09) செய்திகள்

வவுனியா செக்கட்டிபிளவு பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளினால் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 48 அகவையுடைய கோதண்டர் ஜெயபால குலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் வவுனியா பொது மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் வவுனியா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவருவமதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ßßßßßßßßßßßßßßßßßßßßßßßß

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ கிழக்கிலுள்ள ஹிங்குராங்கொடை விமானப் படை முகாம், சீனன்குடா முகாம் மற்றும் கட்டுநாயக்க விமானப் படைத்தளம் ஆகிய விமானப் படையின் மூன்று முகாம்களுக்கு சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக விஜயத்தை மேற்கொண்டார்.

வன்னிப் பகுதியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையில் விமானப் படையினர் ஆற்றிவரும் சேவைகளில் கிளிநொச்சியை கைப்பற்றியமை குறித்து அவர் விமானப் படையினரை பாராட்டும் நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்தது.

முதலில் ஹிங்குராங்கொடை முகாமுக்கும் சீனன்குடா முகாமுக்கும் விஜயம் செய்த அவரை அந்தந்த முகாம்களின் தளபதிகள் வரவேற்றனர்.

விமானப் படையினர் இந்த யுத்தத்தில் ஆற்றிவரும் பணிகளை அங்கு அவர் பாராட்டிப் பேசினார். அதன் பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க விமானப்படை முகாமுக்கு ஹெலிகொப்டர் மூலம் சென்று அங்குள்ள விமானப் படை அதிகாரிகள் மற்றும் விமானப் படையினர் மத்தியில் உரையாற்றினார்.

வன்னியில் விமானக் குண்டு வீச்சில் ஈடுபடும் 12 எம்..27, கிபீர் 5 எவ்.7 விமானங்களின் விமானிகளையும் சந்தித்து நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலரின் இந்த விஜயத்தின் போது விமானப் படைத் தளபதி எயார் மார்சல் றொகான் குணதிலக உட்பட விமானப் படை உயர் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

ßßßßßßßßßßßßßßß

வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை நாள்தோறும் தொடர்கின்றபோதும் அனைத்துலக சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளையும் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது

ßßßßßßßßßßßßßßßßßßßßß

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் பணம் பெற்றுக் கொண்ட பாதாள உலகக் கோஷ்டியினரே கொழும்பில் சிறு குண்டுகளை வெடிக்கச் செய்வதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதியில் குழப்ப நிலைமையை ஏற்படுத்த இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரும், முப்படையினரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சன நெரிசல் மிக்க இடங்களில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயற்படுவதன் மூலம் இவ்வாறான அனர்த்தங்களை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

ßßßßßßßßßßßßß

தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் .தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

படையினர் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இந்த வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம்தான்.

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து விடுதலை புலிகளை சமாதான பேச்சு நடத்தியதனால்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தை இன்று படையினரால் மீட்க முடிந்தது.

அப்போது செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சர்களும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அதன் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இதனை மறந்து விடக்கூடாது. இன்று படையினர் பெற்ற வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் என்றார் அவர்.

ßßßßßßßßßßßßßßßßßßßßßß

முல்லைத்தீவு நகரினை சிறிலங்கா படையினர் கைப்பற்றியதும் வடபகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

யாழ். குடநாட்டில் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வடபகுதியில் முல்லைத்தீவை படையினர் கைப்பற்றிய பின்னர் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரான ஆறு மாதங்களில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெயர்ந்த 300,000 மக்களை மீளக்குடியமர்ந்தும் நடவடிக்கைகள் மிகவும் பெரிய நடவடிக்கையாக அமையலாம். அதன் பின்னர் மக்கள் கணக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் அங்கு நடத்தப்படும்.

படையினர் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முல்லைத்தீவை கைப்பற்றியதும், அங்கு அரசின் நிர்வாக செயற்பாடுகள் தொடங்கும் என்றார் அவர்.

ßßßßßßßßßßßßßß

கிளிநொச்சி நகரில் தற்போதுதெரு நாய்களும் மாடுகளும்மட்டுமே உள்ளன என்று சிங்கள ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிங்கள ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட கிளிநொச்சி நகருக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொழும்பிலிருந்து அனுராதபுரம் வான்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மாங்குளம் சென்றடைந்தனர். அதன் பின்னர் -9 வீதி வழியாக கிளிநொச்சி சென்றடைந்தனர்.

கிளிநொச்சி நகரானது கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சற்று தொலைவில் துப்பாக்கிச் சண்டையும் எறிகணை வீச்சு சத்தமும் கேட்டவாறு உள்ளது.

கிளிநொச்சி நகரில் தெருநாய்கள் மட்டுமே திரிந்து கொண்டிருக்கின்றன. கைவிடப்பட்ட கால்நடைகளையும் காண முடிந்தது.

நாளுக்கு நாள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி சுருங்கி வருகிறது என்று கிளிநொச்சி படை நடவடிக்கைக்கு தலைமை வகித்த ஜெகத் டயஸ் கூறினார,விடுதலைப் புலிகளின் இதர பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். பிரபாகரனை விரைவில் பிடித்துவிடுவோம்என்றார் அவர்.

ßßßßßßß

ஆனையிறவை சிறிலங்கா படைத்தரப்பு ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளுக்கு இந்திய கொள்கை வகுப்பு அமைப்பானறோசெய்தி அளித்ததாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.. மற்றும் யூ.என்.. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பானறோபிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டன.

சிறிலங்கா அரச தரப்பு ஊடகமான டெய்லி நியூசுக்கு சிறிலங்கா படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து:

பரந்தன் மற்றும் கிளிநொச்சியைத் தொடர்ந்து 58 ஆவது படைப் பிரிவினர் பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையில் ஆனையிறவை நோக்கி முன்னேறுகின்றனர்.

ஆனையிறவிலிருந்து 2.5 கிலோ மீற்றர் தொலைவிலேயே படைத்தரப்பு நிற்கிறது.

-9 பாதையை முழுமையாக கைப்பற்றும் நிலையில் படைத்தரப்பு உள்ளது. 58 மற்றும் 57 ஆவது படையணிகளும் பரந்தன் கிழக்கு மற்றும் கிளிநொச்சியிலிருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் முல்லைத்தீவு நோக்கி முன்நகர்ந்துள்ளது.

முல்லைத்தீவு நகரத்தை நோக்கி 59 ஆவது படையணியும் நகர்ந்துள்ளது.

முல்லைத்தீவு நகரின் மையப் பகுதியிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவிலேயே படைத்தரப்பு உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளத

ßßßßßßßßßßßßßßß

வன்னிப் பகுதிக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பென்சேகா விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று காலை இந்த விஜயத்தை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக பூமியான கிளிநொச்சியை மீட்ட இராணுவத்தினரைச் சந்தித்து இந்த விஜயத்தின் போது தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வன்னிப் பகுதியை முழுமையாக மீட்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரின் முன்னகர்வு தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது

ßßßßßßßßßßßßßßßßßß

இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக இந்திய கடலோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் இருவரிடம் மாத்திரமே அடையாள அட்டை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் தற்போது கடலோர காவல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ßßßßßßßßßßßßßßß

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை படையினர் நடத்திய கடும் ஷெல் தாக்குதலில் 15 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியின் வடகிழக்குப் பகுதியான வட்டக்கச்சி, கட்டைக்காடு, மன்னாகண்டல் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் மீதே நேற்று மாலை 4 மணியளவில் படையினர் இந்த ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த ஷெல் தாக்குதலில் நடராசா இராஜேஸ்வரி (வயது 58), சண்முகராசா (வயது 60), கிறிஸ்ரி வோசிங்டன் (வயது 34), பவானி (வயது 41), யோகராசா (வயது 31), சிவஞானம் (வயது 28), சிவகுமார் (வயது 35), பாஸ்கரன் (வயது 36), பியுசின் (வயது 24), சந்திரன் (வயது 39), பாலேந்திரன் (வயது 51), சின்னையா நடராசா (வயது 66), தொம்மை ஜெகராசன் (வயது 31) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் ஷெல் தாக்குதலில் அப்பாவி மக்கள் தொடர்ந்தும் பெருமளவில் கொல்லப்பட்டு வருவதும் தெரிந்தத

ßßßßßßßßßßßßßß

வன்னியில் கடந்த 31 ஆம் திகதி முதல் கடந்த 3 ஆம் திகதி வரையான 4 நாட்களில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களினால் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி கிளிநொச்சி முரசு மோட்டைப் பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சில் 4 பேர் பலியாகினர். 19 பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதியும் அதே பகுதி மீது நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சில் 6 பொதுமக்கள் பலியாகினர், 26 பேர் படுகாயமடைந்தனர். மறுநாள் 2 ஆம் திகதி நடத்தப்பட்ட விமான மற்றும் ஷெல் தாக்குதலில் 7 பொதுமக்கள் பலியாகினர், 20 பேர் படுகாயமடைந்தனர்.

3 ஆம் திகதி நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 3 பொதுமக்கள் பலியாகினர், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதல்களினால் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகளின்றி இருப்பதால் பெரும் அவஸ்தைப்படுவதாகவும் பலரை மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியுள்ளதாகவும் ஆனால் அதற்கு உரிய ஏற்பாடுகளோ, வசதிகளோ இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ßßßßßßßßßßßßßßßßßß

வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர விமானத்தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

காஸா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு

எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீது கொண்டுவரவேண்டும்.

இரவு பகல் பாராது தினமும் பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. விமானப்படையின் புள்ளி விபரப்படி 2007 ஆம் ஆண்டில் 900 தாக்குதல்களும்,2008 ஆம் ஆண்டில் இதேபோன்று 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாக்குதல்கள் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை இலங்கை அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதலாகவே செய்கின்றது.

இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும் யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களிலும் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.

அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது.

20081231, 20090101,20090102 நாட்களில் இடம்பெற்ற இழப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31 ஆம் திகதி நாலு பொதுமக்கள் கொல்லப்பட்டு 19பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதி ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்தனர். 2 ஆம் திகதி ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்தனர்.

இத்தகைய மனிதப்படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை தங்களால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ßßßßßßßßßßßßßßßßß

கடவுச்சீட்டுகளில் சில புதிய முக்கிய பாதுகாப்பு விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆட்கடத்தல்களைத் தடுக்கும் முகமாகவே இந்த ஏற்பாடுகள் அமுலுக்குக் கொண்டு வரப்படவிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

கடவுச்சீட்டு வைத்திருப்பவரின் கைவிரல் அடையாளம் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் அச்சிடப்பட்ட புகைப்படம் என்பனவற்றை கடவுச்சீட்டிற்கு உட்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளரான ரி.பி. அபேயகோன் தெரிவித்திருக்கிறார்.

இந்த புதிய முக்கிய பாதுகாப்பு விதிமுறைகளை வருடத்தின் முதல் ஓரிரண்டு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தத் திணைக்களம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள கடவுச்சீட்டிலுள்ள குறைவான பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக மக்கள் சட்டவிரோத குடியேற்றங்களின் பொருட்டு விரைவாக கடவுச்சீட்டுக்களை மாற்ற முயற்சிப்பதாகவும் கட்டுப்பாட்டாளர் மேலும் சுட்டிக் காட்டியிருக்கிறார

ßßßßßßßßßßßßßß

தென்பகுதியில் சில இடங்களில் வெளிநாட்டு பறவைகள் நடமாடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இவை பனிகாலங்களில் இலங்கையின் தென்பகுதிக்கு வந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து வருகின்ற அழகிய வர்ணப்பறவைகள் அம்பாந்தோட்டை மாவட்டம் பூந்தல் பகுதியில் அதிகமாக நடமாடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவை இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று விடுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பறவைக் காய்ச்சல் நோய் வெளிநாட்டில் இருந்து வருகின்ற பறவைகள் மூலமே பரவுவதாக சுகாதாரப்பகுதியினர் அறிவித்துள்ளனர்.

இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாது தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பகுதியின் தொற்றுநோய் சிகிச்சைப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சகல ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பறவைக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதால் இலங்கைக்கும் அது பரவலாம் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர

ßßßßßßßßßßßßßßß

கிளிநொச்சியை கைப்பற்றியமையை முன்னிட்டு யாழ்ப்பாண இராணுவக் கட்டளையகம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை நடத்தியது. இதன்போது வடமராட்சி மக்கள் நெல்லியடி சந்திவரையில் வாகன ஊர்திகளை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன ஊர்திகளுக்கு முன்னால் படையினரின் கனரக வாகனங்கள் சென்றன.

இந்தநிலையில் குறித்த ஊர்வலத்திற்கு பொதுமக்கள் பலவந்தமாக அழைக்கப்பட்டதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்வலத்தில் பங்கேற்ற பெருமளவானோரை வீடியோ படம் எடுத்ததன் பின்னர் அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தென்மராட்சியின் வர்த்தகர்கள் படையினரின் வழிகாட்டலின் பேரில் கிளிநொச்சி கைப்பற்றலை பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் கைதடி, கொடிகாமம் பகுதிகளில் உள்ள 9 வீதி மக்கள் இலங்கையின் தேசியக் கொடிகளை பறக்கவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ßßßßßßßßßßßßßß

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டுள்ள பிரபாகரனை ஒப்படைக்குமாறு காங்கிரஸ் அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமான கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் கைது செய்யப்பட்டால், ஐக்கிய நாடுகளின் ஜெனீவா பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை திரும்ப இன்னமும் சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளை தடை செய்வது குறித்து எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார

ßßßßßßßßßßßßßßßß

india

வன்னி பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு உரிய அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுக்கவில்லை, எனவும்உயர்ஸ்தானிகரை உடனடியாக நாட்டுக்கு மீள அழைக்குமாறு தமிழக கட்சிகள் மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை மீது அதிருப்தியடைந்திருக்கும் தமிழக கட்சிகள், அவரை நாட்டுக்கு மீள அழைக்க வேண்டுமென மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

தமிழக கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிடர்முன்னேற்ற கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தில் மத்திய அரசாங்கத்துக்கு மும்முரமாக அழுத்தம் கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றையும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை மீண்டும் நாட்டுக்கு அழைக்குமாறு கோரி முறைப்பாட்டுப் பிரதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ßßßßßßßßßßßßßßß

இலங்கை இராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்துவிட்டது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

மத்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்திருந்தது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றாததன் மூலம், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு மீண்டும் துரோகம் செய்துவிட்டது. இனியாவது, இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றியமைத்து, பிரணாப் முகர்ஜியை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன? போர் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க முடிவு செய்து இருக்கிறதா? என்பது பற்றியும் விளக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை உடனடியாக நிறுத்தி, இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

போரை தொடர்வதுதான் தீர்வு என்று ராஜபக்ச அரசு கருதக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழியாகும். தமிழர்கள் அங்கு அமைதியுடன் வாழ்வதற்கும், அவர்களுடைய சட்டபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும்.

மத்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்கக்கூடாது. இலங்கை விமானப்படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாக கூறப்படும் தகவல் பற்றியும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், இலங்கையின் வடபகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவும் மருந்து பொருட்களும் தடையின்றி கிடைக்கும்படி உலக நாடுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.என்றார்.

ßßßßßßßßßßßßßßßßß

முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு. முப்படைகளும் நேரடியாக இறங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள்.

6.5 கோடி தமிழ் மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இந்தியப் பிரதமரை நேரில் போய் சந்தித்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையிலும் மத்திய அரசு அதைப் பொருட்படுத்தாமல் உள்ளது.

இலங்கை முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்று இருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை இது ஒரு பின்வாங்கலே தவிர பின்னடைவு அல்ல. ஏற்கனவே பலமுறை இப்படி நடந்துள்ளது. பின்னர் விடுதலைப் புலிகள் கொரில்லா போர் முறை மூலம் தாக்குதல் நடத்தி சிங்கள படைகளை விரட்டி அடித்திருக்கிறார்கள்.

அதே போல் கிளிநொச்சியை மீண்டும் கைப்பற்றுவார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகஅரசு ஆழ்ந்து சிந்தித்து தமிழ் இனத்தை பாதுகாக்க இந்த நெருக்கடியான சூழ்நிலையில் துணிச்சலான முடிவெடுக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தேர்தல் அரசியலை மறந்து தமிழ் உணர்வு உள்ள அனைத்து கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட இருக்கிறது. இதற்காக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழ் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை சந்தித்துப் பேச இருக்கிறேன்.

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது வெறும் பகல் கனவு. அவரை உயிருடன் பிடிக்க முடியாது. தப்பித்து ஓடவும் மாட்டார். எதிரியிடம் மண்டியிடாமல் தமிழ் மக்களுக்காக இறுதிவரை போராடி உயிரை விடுவேன் என்று பிரபாகரனே கூறி இருக்கிறார். எனவே அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வீரப்ப மொய்லியின் அற்ப ஆசை நிறைவேறாது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுக ஏற்கனவே பல தியாகங்கள் செய்திருக்கிறது என்றார்.

ßßßßßßßßßßßßßßßßßßß

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் நே‌ற்று நள்ளிரவு முத‌ல் தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் தினமும் ரூ.1000 கோடி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும், தேசிய அனுமதி பெற்ற லாரிகளுக்கான வரியை ரூ.5000ல் இருந்து ரூ.1500 ஆக குறைப்பது, டயர்களுக்கான 35 சதவீத வரியை ரத்து செய்தல், பழுதான சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் 5ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.

இது தொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகளுடன் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. இதையடுத்து, லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று ந‌ள்‌ளிரவு முத‌ல் துவங்கியது.

ßßßßßßßßßßßß

.தி.மு.க. வே‌ட்பாள‌ர் லதா அ‌தியமானை ஆத‌‌ரி‌‌த்து ‌திரும‌ங்கல‌த்‌தி‌ல் இ‌ன்று நடைபெறு‌ம் ‌பிரசார பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் முதலமைச்சர் கருணாநிதி பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்

ßßßßßßßßßßßß

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் இன்று அளிக்கப்பட்டது. புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனைத் தெரிவித்தார். .

வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக்கை சம்மன் செய்து, மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை அவரிடம் அளித்தாக பிரணாப் முகர்ஜி கூறினார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள வெளிநாடுகளின் தூதர்களை அழைத்து அவர்களிடம் விளக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து உலகில் உள்ள அனைத்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் தாம் கடிதம் எழுதியிருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

ßßßßßßßßßßßßßß

மத்திய ரெயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் வாழ்க்கையை சித்தரிக்கும் 16 கார்ட்டூன் படங்கள் தயாரிக்கப்பட உள்ளன. பீகாரை சேர்ந்த பிரபல கேலிச் சித்திர நிபுணர் பவன் குமார் இந்தப் படங்களை தயாரிக்கிறார். .

நகைச்சுவையாக பேசி பலரையும் கவருவதில் வல்லவரான லாலு பிரசாத் யாதவ் பெயரில் ஏற்கெனவே பொம்மைகள், பட்டாசுகள் மற்றும் மிட்டாய்கள் வந்துள்ளன.

தற்போது பவன்குமார் என்ற பிரபல கேலிச் சித்திர நிபுணர் லாலு பிரசாத்தின் பிள்ளைப்பருவம் முதல் தற்போது வரையில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தலா இரண்டு நிமிடம் ஓடக்கூடிய 16 கார்ட்டூன் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இதுவரை வெளிவந்துள்ள கார்ட்டூன் நாயகர்களை விட லாலு கார்ட்டூனுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று பவன்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் படங்களுக்கு லாலுவும் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்று பவன் குமார் தெரிவித்தார்.

இந்த படத்தின் சில காட்சிகளை தாம் லாலுவிடம் காட்டியதாகவும், அதைப் பார்த்து ரசித்த லாலு, இந்தப் படங்களை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக உருவாக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

ßßßßßßßßßßß

………………………………..

மத்திய கிழக்கின் காஸாவிலே இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டுவருகிறர்கள்.

வடக்கு காஸாவிலே துருப்பினர் முன்னேறிவர தரைப்படையும் விமானப்படையும் மட்டுமல்லாது கப்பல் படையும் குண்டுகளை வீசிவருகிறது.

எல்லையிலிருந்து பார்க்கும் போது காஸாவுக்குள் ஆழமாக மோதல்கள் நடந்து வருவதாக தெரிகிறது என்று காஸா எல்லையிலுள்ள செய்தியாளர் ஒருவர் கூறுகிறார

—————

sports

சிட்னியில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப் பிரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது. .

பின்னர் ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா இன்று தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது.இறுதியில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு 327ரன்கள் எடுத்திருந்தது. 2 tJ ,dpqir njhlffpa njddhgphpffh 33 xllqfSld fsjjpy cssJ

…………………………

 

1 euro = 157,73 sl /67,22in

1us dollar = 113,38sl /48,32in

1 swiis fr =105,15sl /44,81in

1uk pound = 164,62 sl / 70,16in

Leave a Reply

Your email address will not be published.