‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (03.01.09) செய்திகள்

 பயங்கரவாதத்திற்கு எதிராக வடக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்ட படைநடவடிக்கையின் போது பெருமளவான படையினர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஊனமுற்றும் உள்ளனர் என்று இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் கடந்த இரு மாதங்களில் 1500 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதுடன் 1700 ற்கும் 1900 ற்கும் இடைப்பட்ட பயங்கரவாதிகளே மீதமிருக்கின்றனர். இவ்வாறான் நிலையில் படை நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு இவ்வருடம் முழுவதும் தேவைப்படாது என்றும் அவர் சொன்னார். கிளிநொச்சியை கைப்பற்றியது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் கிளிநொச்சி மீட்கப்பட்டது தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெளிவுப்படுத்துகையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கிழக்கில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கை 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் வடக்கை நோக்கி முன்னகர்த்தப்பட்டது. வடக்கில் 57ஆவது படையணி வவுனியாவில் இருந்து தனது நடவடிக்கையை 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்தனர்.

2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மடுவில் இருந்து மன்னாரை நோக்கிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் வெலிஓயாவில் இருந்து 57, 59 படையணிகள் நடவடிக்கைகளை ஆரம்பித்தன. மன்னார் மீட்கப்பட்டதன் பின்னர் தெற்கில் இருந்து வடக்கிற்கு பயணிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததுடன் மாங்கேணி, நெடுங்கேணி பகுதிகளிலும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றன.

மன்னாருக்கு பின்னர் பூநகரி கைப்பற்றதோடு, ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கை 2007ஆம் மார்ச் மாதம் முதல் இரவு, பகல், மழை, வெள்ளம் ,காடு, வெயில் என்று பார்க்காது ஒவ்வொரு நாளும் எந்த நேரத்திலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த தாக்குதல்கள் மூலம் புலிகளை எந்த நேரத்திலும் எங்கும் தாக்க முடியும் என்பதை படைத் தரப்பினர் எடுத்துக்காட்டினர்.

எடுக்கப்பட்ட படை நடவடிக்கைகள் மூலம் பெருந்தொகையான படையினர் பலியானார்கள், காயமடைந்துள்ளனர். வைத்தியசாலைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்னர். பலர் ஊனமுற்றவர்களாக இருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களே பொறுப்பு கூற வேண்டும்.

மடு, பூநகரி பிரதேசத்தை கைப்பற்றியதன் மூலம் 23 வருடங்களுக்குப் பின்னர் தெற்கிற்கும் வடக்கிற்குமான பாதை திறக்கப்பட்டது. இந்த பாதை இன்றும் திறந்துள்ளதுடன் பாதையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பூநகரிக்குப் பின்னர் கிளிநொச்சி மற்றும் பரந்தனை நோக்கி இரு முனைகளில் படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த வருடம் இறுதி நாளன்று நள்ளிரவு 1.30 மணியளவில் பரந்தனை கைப்பற்றி 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு கிளிநொச்சியை நோக்கி பயணித்தோம்.

கிளிநொச்சிக்கு வடக்கு மேற்கு தெற்கு மும் முனைகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு புலிகளின் அரசியல் மத்திய நிலையம், வங்கி, நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என சகலவற்றையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். கிளிநொச்சியில் இருந்து தொடர்ந்து மேற்கொண்ட படை நடவடிக்கை மூலமாக படையினர் தற்பொழுது ஆனையிறவுக்கு இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கின்றனர். இதேவேளை, வெலிஓயாவில் இருந்து முன்னேறிய படையினர் முல்லைத்தீவில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கின்ற விமான நிலைய ஓடுபாதைக்கருகில் இருக்கின்றனர். இரவு,பகல் பாராது தொடர்ச்சியாக படைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி 1998 ஆம் ஆண்டிற்கு பின்னரும் பரந்தன் ,ஆணையிரவு 1994 ஆம் ஆண்டிற்கு பின்னரும் மீட்கப்பட்டுள்ளது. புலிகள் கிளிநொச்சியிலிருந்து மேற்கு திசையில் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். தப்பித்து ஓடிகொண்டிருக்கின்ற புலிகளையும் படையினர் விரட்டி தாக்குதல் நடத்திகொண்டிருக்கின்றனர்

. கிழக்கில் தொப்பிக்கல பிரதேசத்தை போன்றதொரு பிரதேசமே மீதமிருக்கின்றது எனினும் அந்த பிரதேசம் களப்பு,கடலினால் சூழப்பட்டுள்ளது படைநடவடிக்கையின் மூலமாக கடந்த இரண்டு மாதங்களுக்குள் 1500 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர் இன்னும் 1700 ற்கும் 1900 ற்கும் இடைப்பட்ட பயங்கரவாதிகளே மீதமிருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நிறைவுசெய்வதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படாது இவ்வருடமும் தேவைப்படாது வருடம் நிறைவடைவதற்குள் மீதமுள்ளவற்றையும் மீட்போம் என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது என்று தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்
இன்று கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை. கிளிநொச்சி வீழலாம். ‘கிலிவீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் இரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது.
நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக்கொண்டோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.
இலங்கையில் போர் நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு போரை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர்கள் எப்போதுமே தங்களுடைய கடந்த கால பெருமைகளில் ஆழ்ந்து அதைப்பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி இன்று காதில் விழுந்தது. அங்கு ஒரு இனம் மெல்ல அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆனால் அதனை மறந்து, அதனை தாண்டி ஏதேதோ தேடல்களில் நம்மை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய சகோதரர்களும், சகோதரிகளும் அங்கு வாழும் வகையற்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலை உருவாகிவிட்டது.
எது நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்தோமோ? அது இன்று நடைபெற்று விட்டது. நாம் இன்னும் பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இதற்காக இந்த படுகொலைகளை எதிர்த்து, இன அழிவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தயவு செய்து, வீறுகொண்டு எழுங்கள், நம்முடைய சகோதரர்களுக்காக, தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல் கொடுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தத் தோல்வி கெரில்லா போராட்டத்தின் உதயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை மரபு ரீதியான கெரில்லா தாக்குதல்களை பல பகுதிகளிலும் வலிந்து மேற்கொள்ளக் கூடும் என தெரிவித்துள்ளது.

நிலப்பரப்புக்களை இழந்த போதிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் போராட்டத்தை முன்னெடுப்பர் என குறிப்பிட்டுள்ளது.

எதிர்காலத்தில் கெரில்லா யுத்தம் வெடிப்பதனை எவராலும் தடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்துவில்லை எனவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு ஓர் நிலப்பரப்பை இன்னமும் தம் வசம் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அரசாங்கம் புத்தி சாதூரியமாக செயற்பட்டு உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்தி அரசியல் ரீதியான தீர்வின் மூலம் நீண்டகாலமாக தொடரும் யுத்தத்திற்கு தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதிரியான போராட்டங்களுக்கு ஒருபோதும் முற்றுப் புள்ளி கிடையாது இரு தரப்பினாலும் எட்டப்படும் இணக்கப்பாடே இவ்வகைப் போராட்டங்களின் முடிவாக கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்கள் இதுவரையில் இரத்த வெள்ளத்தில் நனைந்தது போதுமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முனைப்புடன் செயற்பட்டதென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு கருணா அம்மான் பிளவடைந்ததனைத் தொடர்ந்தே விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடையத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்து வந்த கருணா அம்மான் 6000 உறுப்பினர்களை தம்முடன் இணைத்துக் கொண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட கேக்கின் மேல் ஐசீங் பூசும் நடவடிக்கையையே தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது கட்சி பின்பற்றிய தந்திரோபாயங்களின் ஊடாக நாட்டில் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யுத்த பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி எல்லாக் காலங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஓர் அமைப்பு எனவும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க படையினர் மேற்கொள்ளும் முயற்சி போற்றத் தக்கதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுனமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றிகளின் மூலம் அரசாங்கம் மேற்கொள்ளும் ஊழல் மோசடிகள் மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவுமு; மக்கள் மீது கடும் பொருளாதார சுமை பலவந்தமாக திணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாரியளவு நிதி மோடியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மோசமான ஆட்சியை மூடிமறைக்கும் ஓர் போர்வையாக அரசாங்கம் யுத்தத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதென பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியா பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமது குடும்ப உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இரு குடும்பஸ்தர்கள் முறையிட்டுள்ளார்கள்.
வவுனியா மணிபுரம் பகுதியில் விறகு வெட்டிவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தனது கணவனைப் பார்வையிட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என அவரது மனைவி வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.
கடந்த மாத இறுதியில் இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த தனது கணவன் அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்றும், அவரைப் பார்ப்பதற்காக அங்கு சென்றபோது தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
வன்னிப் பகுதியில் இருந்து 46 பேரில் ஒருவராக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பாதுகாப்புத் தேடி வந்தபோது காட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுவரும் தனது மகனைப் பார்வையிடுவதற்கு அங்கு கடமையில் உள்ள பாதுப்புப் பிரிவினர் தனக்கு அனுமதி வழங்கவில்லை என அவரது தந்தையார் .குணபாலன் மனித உரிமை ஆணைக்குழுவினரிடம் முறையிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பாக தமது தலைமை அலுவ லகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலக இணைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆரம்ப காலம் முதலே தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியும் என ஜே.வி.வி. வலியுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் சில அமைச்சர்களைவிட யுத்தத்தின் மீது ஜே.வி.பி.க்கு அதிக நம்பிக்கை காணப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அன்று நாம் சொன்னதை படைவீரர்கள் நாட்டிற்கு நிஷரூபித்து காட்டியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் தருணத்தில் யுத்த நிறுத்தமொன்று மேற்கொள்ளப்படக் கூடாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் மன வலிமை குன்றியிருக்கும் சந்தர்ப்பத்தில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!
வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளார்கள் என பிபிசியின் ஊடகவியலளார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒலிபரப்பாகிய பிபிசி தமிலோசையில் ஆய்வாளர் இக்பால் அத்தாஸுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது வன்னியில் இரண்டரை இலட்சம் மக்கள் சிக்குண்டுள்ளதாக வானொலியின் ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார். அதில் எவ்வித உண்மையும் இல்லை என மறுத்த பாராளுமன்ற உறுப்பினர் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வன்னி மண்ணில் உள்ள மக்கள் தான் வன்னியில் வாழ்ந்துவருகின்றார்கள் சிறிலங்கா படையின் வல்லளைப்புக்கள் மாத்திரமின்றி விமானம், பல்குழல் பீரங்கித்தாக்குதல்களினால் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து வன்னி மண்ணில்தான் வாழ்ந்துவருகின்றனர்.
அவர்கள் மீது போர் அவலங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு இழப்புக்களை ஏற்படுத்திவருகின்றனர். அத்துடன் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் பெரும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர். இந்நிலையில் வன்னியில் மக்கள் சிக்குண்டுள்ளார்கள் என்பது கண்டிக்கத்தக்கதாகும் என தெரிவித்த அவர் இதனை பிபிசி வாபஸ் பெறவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
2009 இன் முதலாவது பாராளுமன்ற அமர்வின் முதல் நாளான எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதென கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
7 ஆம் திகதி தேச கட்டுமானம் தொடர்பான பிரேரணை உட்பட 3 சட்டமூலங்களும் 8 ஆம் திகதி இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்ககையருக்கும் மற்றும் நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள இலங்கைப் பிரஜாவுரிமையற்றவர்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கும் சட்டமூலம் விவாதத்துக்கு எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அகதி முகாம்களிலுள்ள பிரஜாவுரிமையற்ற இலங்கையருக்கு அதனை பெற்றுக்கொள்ளும் முகமாக ஜே.வி.பி. எடுத்த நடவடிக்கையினால் இச்சட்டமூல பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது.
அகதி முகாம்களிலுள்ளோரின் பிரச்சினைகளை கண்டறியும் முகமாக முதலில் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் அநுர பிரியதர்ஷன யாப்பா, தொடர்ந்தும் தகவல் ஊடகத்துறை அமைச்சராகவும் செயற்படுவார் என அரசாங்க தகவல் பணிப்பாளர் அநூஷ பெல்பிட்ட விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் சிறிய மாற்றமொன்றைச் செய்தார். அப்போது முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவியை வகித்த கலாநிதி சரத் அமுனுகம பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். தகவல் ஊடகத்துறை அமைச்சுப் பதவியை ஜனாதிபதி தமது பொறுப்பில் எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பாவுக்கு தகவல் ஊடகத்துறை அமைச்சுப் பதவியுடன் சேர்த்தே முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் பணிப்பாளர் அநூஷ பெல்பிட்ட அறிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!
இராணுவ வீரர் ஒருவரின் மனைவி (24 வயது) தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவத்தில் குழந்தையும் உயிரிழந்துள்ளது.
வலஸ்முல்ல பகுதியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இருவரும் கிணற்றில் இருந்து மயக்கமான நிலையில் மீட்கப்பட்டு மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், தீவிர சிகிச்சையின் பின்னர் இருவரும் மரணமானதாக பொலிஸார் தெரிவித்தனர். தனக்கு ஏற்பட்டுள்ள தலைவலியை சுகப்படுத்த முடியாதுள்ளதால் தான் தற்கொலை செய்யக் கிணற்றில் குழந்தையுடன் குதித்ததாக அப்பெண் இறப்பதற்கு முன்பு பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மாத்தறை மரண விசாரணை அதிகாரி நிமல் சிறிபால மரண விசாரணையை நடத்திப் பெண்ணின் மரணம் தற்கொலை என்றும், குழந்தையின் மரணம் கொலை எனவும் தீர்ப்பு வழங்கினார்.
இப்பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவரது கணவன் அநுராதபுரம் இராணுவப் பயிற்சி முகாமில் பணியாற்றி வருகிறார் எனவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!
மத்திய வங்கி குண்டுவெடிப்புடன் தொடர்பான பிரதான சந்தேக நபரை வவுனியா இரட்டைபெரியகுளம் சோதனைச்சாவடியில் வைத்து கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர், வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் கடந்த 30 ஆம் திகதி ஆஜர் செய்யப்பட்டார்.
சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் அர்ஜுன கொடிகாரவின் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய வங்கி குண்டுவெடிப்பின் பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்திருந்தது.
மாவட்ட நீதிவான் சந்தேக நபரை, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
தெகிவளை ரயில் நிலையத்தில் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவரிடமிருந்து சிங்களப் பெயரில் அமைந்த போலி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான ஒருவரை பொரலஸ்கமுவ பிரதேசத்தில் தாம் கைது செய்ததாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் தெகிவளை ரயில் நிலைய குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பெரியசாமி மனோகரன் என்ற இந்த சந்தேக நபர் விதானகே ராஜா புஷ்பகுமார என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தெகிவளை கௌடான வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த இந்த சந்தேக நபர், 1996 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு முன்னர் அதன் பிரதான சந்தேகநபர் தனது வீட்டில் தங்கியிருக்கவும் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்துகளை புதைத்து வைக்கவும் உதவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான வான் தாக்குதல்கள் மூலமான படுகொலைகளைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
நேற்று ஜும்ஆ தொழுகையின் பின் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.
இஸ்ரேல் மீதும், உலக பொலிஸ்காரன் அமெரிக்கா மீதும் மிக உச்சக்கட்ட சீற்றம் கொண்டவர்களாக முஸ்லிம் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் தமது உணர்வலைகளை வெளிப்படுத்தினர்.
பாலஸ்தீன காஸாப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற கொடூர செயல்களையும் தாக்குதல்களையும் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கான குத்பா பிரசங்கங்கள் இடம்பெற்றன.
!!!!!!!!!!!!!!!!!
யாழ்மனித உரிமைகள் ஆனைக்குழுவில் 2008 ஆம் ஆண்டில் 1009 பேர் காணாமற் போய் உள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு அதிகாரி எஸ்.சிவராஐசிங்கம் தெரிவித்தார். பதியபப்பட்ட முறைப்பாடுகளைத் தவிர மேலும் பலர் காணாமல் போய் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!
வன்னிப் போர்முனை பிரதேசத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்படும் 52 சிவிலியன்களை மன்னார் நகரப்பகுதிக்கு இராணுவத்தினர் அழைத்துச் சென்றதாக மன்னார் தகவல்கள் தெரிவித்துள்ளன.

உயிலங்குளம் பகுதியில் இராணுவத்தின் பொறுப்பில் இருந்த இவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகநேற்று பிற்பகல் மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ் பிள்ளை தலைமையில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் செயலாற்றும் முக்கிய சர்வதேச மற்றும், உள்ளூர் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், புனர்வாழ்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் மற்றும் செயலக உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வன்னிப்பிரதேசத்தில் இருந்து ஏற்கனவே மன்னார் நகரப்பகுதிக்கு இடம் பெயர்ந்த பல குடும்பங்கள் இன்னமும் மன்னார் களிமோட்டை என்னுமிடத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையர் இருவருக்கு சவூதி அரேபியாவில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.கணக்காளர் ஒருவரை கொலை செய்ததுடன் அவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலுமே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சூடானியரான மேற்படி கணக்காளர் வங்கியிலிருந்து பணத்துடன் வெளியில் வரும்போதே இலங்கையர் இருவரும் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
சென்னைக்கு ஜனவரி 7ஆ‌ம் தேதி வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூ‌றியு‌ள்ளா‌ர்.இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி குரல் எழுப்பியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை எ‌ன்று கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள நெடுமாற‌ன், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் விடுத்த வேண்டுகோளையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை எ‌ன்று தெ‌‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனவரி 7ஆ‌ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுமுடிவு செய்துள்ளது என்று பழ.நெடுமாறன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கி‌ளிநொ‌ச்‌சியைஇல‌ங்கை ராணுவ‌ம் கை‌ப்ப‌ற்‌‌றியு‌ள்ளதை‌த் தொட‌‌ர்‌ந்து செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள அ‌ந்நா‌ட்டு தூதரக‌த்து‌க்கு பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இலங்கையில் சிங்களப் படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் கிளிநொச்சி பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் நே‌ற்று கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு செ‌ன்னை மாநகர ஆணைய‌ர் ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

!!!!!!!!!!!!!!!!!
திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு. வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.‌வி.தங்கபாலு ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள்
!!!!!!!!!!!!!!!
திருமங்கலம் ச‌ட்டம‌ன்ற இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் ...தி.மு.. வேட்பாளரை ஆதரித்து அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா இன்று முதல் நா‌ன்கு நா‌ட்க‌ள் பிரசாரம் செ‌ய்‌கிறா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
இ‌ந்‌தியா‌வி‌‌ல்தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம் இட‌ம் இ‌ல்லை எ‌ன்று உ‌ள்துறை அமை‌ச்ச‌ர்சித‌ம்பர‌ம் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

அ‌ஸ்ஸா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு‌ப்பிறகுநிலவு‌ம் சூ‌ழ்‌நிலை கு‌றி‌த்துஆலோசனை நட‌த்‌திய அமை‌ச்ச‌ர்சித‌ம்பர‌ம் குவஹா‌ட்டி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அமை‌தி‌க்கு‌ம் அ‌ச்சுறு‌த்த‌ல்விளை‌வி‌க்கு‌ம் யாரு‌க்கு‌ம் இ‌ங்கு இட‌‌மி‌ல்லை எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

“நா‌ன் பேசுவதை இ‌ப்போது கே‌ட்டு‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ல்லது நாளை ஊடக‌ங்க‌‌ளி‌‌ல் படி‌க்க‌ப்போகு‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்க‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள், உடனடியாக‌த் த‌ங்க‌ளி‌ன்நிலையை மா‌ற்‌றி‌க்கொ‌ண்டு பே‌ச்சு நட‌த்த மு‌ன்வர வே‌ண்டு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் அவ‌ர்களு‌க்கு எ‌திராக‌க் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்எ‌ன்றா‌ர் அவ‌ர்.

மேலு‌ம், இராணுவ‌‌த்‌தின‌ர், துணை இராணுவ‌த்‌தின‌ர், மா‌நில‌க் காவ‌ல்துறை‌யின‌ர் ஆ‌கியோரு‌க்கு, அமை‌தி‌க்கு‌ம் ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் அ‌ச்சுறு‌த்தலாக உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன்மீது நடவடி‌க்கை எடு‌க்க‌த் தேவையான உ‌த்தரவுகளு‌ம் அ‌றிவுறு‌த்த‌ல்க‌ளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று‌ம்சித‌ம்பர‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
!!!!!!!!!!!

 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து .நா. பாதுகாப்பு குழு விதித்துள்ள தடை உத்தரவை சமாளிக்க, ஜமாத்உத்தவா அமைப்பு தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லஷ்கர்தயீபாவின் முதன்மை துணை அமைப்பான ஜமாத்உத்தவா தனது பெயரை தெஹ்ரீஹுர்மத்ரஸூல் (கடவுளின் மரியாதையை காக்கும் அமைப்பு என்று பொருள்) என்று மாற்றிக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அரசின் நெருக்குதலை தவிர்க்கவே ஜமாத்உத்தவா அமைப்பு தனது பெயரை மாற்றிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேரணி ஒன்றில் தெஹ்ரீஹுர்மத்ரஸூல் என்று பெயரிட்ட அமைப்பு பங்கேற்றது. இதில் ஜமாத்உத்தவா அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டதை வைத்தே இந்திய அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் அளித்துள்ள பேட்டியில், ஜமாத்உத்தவா அமைப்பு புதிய பெயரில் செயல்படத் துவங்கிவிட்டதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 !!!!!!!!!!!!!!!!!!!!
இராக்கின் பாக்தாதுக்கு அருகே சுனி அரபு பழங்குடியினத்தலைவர்களின் கூட்டம் ஒன்றில், ஒரு தற்கொலையாளி தனது குண்டை வெடிக்கச் செய்ததில் 30 பேர்வரை கொல்லப்பட்டதாக இராக்கியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராக் தலைநகரான பாக்தாதுக்கு தெற்கே, யூசுபியா நகரில் நடந்த இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் அகப்பட்டவர்களில் பல பழங்குடியினத்தலைவர்களும் அடங்குகிறார்கள்.
இராக்கில் அல்கைதாக்கள் முன்னர் பலமாகத் திகழ்ந்த ஒரு பகுதியிலேயே யூசுபியா நகர் அமைந்துள்ளது.
மத மோதல்களால் அதிகளவிலானோர் கொல்லப்பட்டு வந்ததால், இந்தப் பிராந்தியம் மரண முக்கோணம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக அங்கு வன்செயல்கள் குறைந்து வந்தன.
!!!!!!!!!!!!!!!!!
1 euro =157.84sl /66.90in
1us $ =113.37 sl / 48.06in
1 swiss fr =105.01sl /44.51in
1uk pound =164.95sl /69.92in

Leave a Reply

Your email address will not be published.