லக்வி, ஷா நாடு கடத்தல்-பாக். ‘வி்ளக்கம்’-அமெரிக்கா பல்டி!

இஸ்லாமாபாத்: மும்பையில் நடந்த கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான லக்வி, ஜரார் ஷா ஆகியோரை பாகிஸ்தானில் வைத்தே விசாரிக்கலாம் என அமெரிக்கா கூறியுள்ளதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 நாட்களுக்கு முன்புதான் மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான லக்வி, ஜரார் ஷா ஆகிய இரு பெரும் தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானை கண்டிப்புடன் கேட்டுக் கொண்டது அமெரிக்கா.

ஆனால் தற்போது மனதை மாற்றிக் கொண்டு விட்டதாம் அமெரிக்கா.

இதுகுறித்து பாகிஸ்தானின் டான் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பைத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் நாட்டு சட்டப்படி விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளதாம்.

லக்வி, ஷாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கூறியதற்கு, பாகிஸ்தான் தரப்பில் சில ‘நியாயங்கள்’ எடுத்து வைக்கப்பட்டதாம்.

அதாவது, இந்தியா, பாகிஸ்தான் இடையே கைதிகளைப் பரிமாறிகளைக் கொள்வது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இல்லை. எனவே லக்வி, ஷாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் சிரமம் உள்ளது.

மேலும், இருவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தால், அதனால் பாகிஸ்தானுக்குள் பெரும் குழப்பம் ஏற்படும். ‘வேண்டாத’ விளைவுகள் ஏற்படும். ஜனநாயக அரசு சீர்குலையும்.

இதனால் பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தான் – அமெரிக்க முயற்சிக்கு பெரும் குந்தகம் ஏற்படும்.

தலிபான்கள் மற்றும் தீவிரவாதிகளின் வேட்டைக்காடாக பாகிஸ்தான் மாறி விடும். இதைத்தான் அமெரிக்கா விரும்புகிறதா என்று பாகிஸ்தான் தரப்பில் அமெரிக்காவிடம் கேட்கப்பட்டதாம்.

மேலும், லஷ்கர் இ தொய்பா மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும், ஆனால் யாரையும் இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்றும் பாகிஸ்தான் தரப்பில் அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டதாம்.

பாகிஸ்தானின் ‘நிலைமை’யைப் புரிந்து கொண்ட பின்னர்தான், லக்வி, ஷாவை நாடு கடத்தும் யோசனைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் அமெரிக்கா.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை, இந்தியாவுக்கு சாதகமா பாதையில் போய்க் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது தடலாடியாக மாறியிருப்பது குறித்து இந்திய அரசும் கவனத்தில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.