யாருமே இல்லாத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளது – விடுதலைப் புலிகள்

posted in: தமிழீழம் | 0

வன்னி: யாருமே வசிக்காத நகரமான கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. அங்கிருந்த மக்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமையகத்தையும் நாங்கள் ஏற்கனவே மாற்றி விட்டோம் என விடுதலைப் புலிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வீழ்ந்தது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் ஆட்களே வசிக்காத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளதாக அவர்கள் சார்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கிளிநொச்சியில், இருந்த மக்கள் அனைவரும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஏற்கனவே வட கிழக்குக்கு இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமை அலுவலகமும் வட கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது.

மொத்தத்தில் யாருமே இல்லாத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளது.

எங்களது போர் உத்தி, தற்காப்புதான். எனவே எங்களது தரப்பில் அதிக உயிர்ச்சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ராணுவத்தின் வசம் வந்துள்ள கிளிநொச்சி 1998ம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் -2 தாக்குதலின் மூலம் ராணுவத்தை சிதறடித்து கைப்பற்றப்பட்ட நகரமாகும். அந்த தாக்குதலின்போது ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்டனர்.

அது முதல் கிளிநொச்சி புலிகளின் கோட்டையாகவும், தலைநகரமாகவும் விளங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.