ஜம்மு காஷ்மீரில் மோதல்: 2 ராணுவத்தினர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக பயங்கரவாதிகளுடன் இன்று நீடித்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பூஞ்ச் மாவட்டம் மெந்தர் வனப்பகுதியில் உள்ள பாடிதார் என்ற இடைத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நேற்று மாலை சண்டை தொடங்கியது.

இன்று காலை வரை நீடித்த இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ராணுவத் தரப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பயங்கர ஆயுதங்களுடன், மறைவிடத்தில் இருந்தபடி 6 பயங்கரவாதிகள் இந்த மோதலில் இறங்கியதாக , ஜம்முவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.