பாண்டியன் உள்பட ரயில்களில் சைட் மிடில் பெர்த் ரத்து

posted in: தமிழ்நாடு | 0

மதுரை: பயணிகளுக்கு பெருத்த கஷ்டத்தைக் கொடுத்த சைட் மிடில் பெர்த் வசதியை தெற்கு ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. மோகனின் முயற்சியால் பயணிகளுக்கு மோட்சம் கிடைத்துள்ளது.

எம்.பி. மோகன் அவர்களை முன்மாதிரியாக்கொண்டு இனி எல்லா அரசியல்வாதிகளும் செயல் பட வேண்டும் என்பதே மக்கள் அவா. நன்றி மோகன். வளர்க உம் மக்கள் தொண்டு.

இது குறித்து எம்.பி. மோகன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்ற ஆண்டு நவம்பரில் பாண்டியன் அதி விரைவு ரயில் வண்டிப் பெட்டிகளில் நெடுக்குவாட்டில் கீழ் மற்றும் மேல் படுக்கைகளுக்கு நடுவில் மூன்றாவது படுக்கை ஒன்றை ரயில்வே நிர்வாகம் பொருத்தியது.

இதனால் ஒரு பெட்டிக்கு 9 படுக்கை வசதிகள் கூடுதலாக கிடைத்தன. இதன் காரணமாக லோயர் மற்றும் மிடில் பெர்த்துகளுக்கு இடையே உள்ள இடைவெளி வெறும் 52 சென்டிமீட்டர் ஆகக் குறைந்தது.

இதனால் பயணிகளுக்கு போதுமான வெளிச்சம், காற்று கிடைக்கவில்லை. இடித்துக் கொள்ளாமல் புரண்டு படுக்க முடியாது. படுத்தவர்கள் எழுந்து உட்கார முடி யாது.

இவைகளை நேரில் சென்று கண்டறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மோகன், புதிதாகப் பொருத்தப்பட்ட மிடில் பெர்த்தை உடனடியாக அகற்றச் சொல்லி ரயில்வே நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதினார்.

அவருடைய கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று, அதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ரயில்வே நிர்வா கத்திற்கு மோகன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.