கொழும்பு விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் பாரிய குண்டுவெடிப்பு -இரு விமானப்படையினர் பலி 32 பேர் காயம் -காவற்துறைப் பேச்சாளர்

கொம்பனித்தெருவிலுள்ள விமானப்படைத் தலைமையகம் முன்பாக தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இத் தற்கொலை குண்டு தாக்குதலில் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை குண்டுதாரி விமானப்படை தலைமையகத்தினுள் நுழைய முற்பட்ட வேளை குண்டுதாரி குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் மூவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக விபத்து சேவைப்பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இத் தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து கோட்டையிலிருந்து கொம்பனித்தெரு வரையான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் சம்பவ இடத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilskynews.com

Leave a Reply

Your email address will not be published.