புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர தீ: 60 பேர் கருகி பலி (02.01.2009) செய்திகள்.

பாங்காக் : தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில்,

பிரபலமான இரவு விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நடந்த தீ விபத்தில், ஏராளமான வெளிநாட்டவர்கள் உட்பட 60 பேர் உயிரிழந்தனர்; 200 பேர் படுகாயமடைந்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில் உள்ள எக்காமை நகரில் அமைந்துள்ளது சாந்திகா கிளப். இங்கு உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வருவர். அங்கு நேற்று அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியில், ஒலி ஊடுருவிச் செல்லாத வகையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது தளத்தின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இங்கு நடு இரவுக்குப் பின் நிகழ்ந்த தீ விபத்தில், வெளிநாட்டவர்கள் உட்பட 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தில், குறிப்பாக ஆசியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தின் போது வெளியே ஓட முயன்றது, புகையை சுவாசித்தது, காயம் போன்றவற்றால், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நேபாளம், மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டை சேர்ந்த 10 வெளிநாட்டினர் பலியாகி உள்ளனர். 30 பேரின் உடல்கள் முழுவதும் கருகிவிட்டதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மேடையில் இருந்த இசைக் குழுவினர் குறைந்த இடத்தில், வாண வேடிக்கை நிகழ்த்தியதால், இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கின்றன. இரண்டு மாடிகளை கொண்ட இந்த கிளப்பில் தீ விபத்தின் போது, 1000 பேர் கூடியிருந்தனர். இந்த தீ விபத்தால் கட்டிடத்தின் முன்பகுதி கருப்பாகவும், பாதி சேதமடைந்தும் காணப்படுகிறது. இந்த சாந்திகா கிளப் விரைவில் வேறு இடத்திற்கு மாறுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு போலீசார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.